மாற்றுங்கள் சிதம்பரத்தை......

Sunday, November 22, 2009

கடந்த நவம்பர் 26 ம் நாள் மும்பை நகரத்தை தீவிரவாதிகள் அதிரடித்தாக்குதலில் மும்பை மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த கர்கரே உள்பட தேசபாதுகாப்புபடை  அதிகாரிகள் , பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை இந்தியா அளித்தும் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடமும் ஒப்படைக்கவில்லை , நடவடிக்கையும் எடுக்கவில்லை , நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா நடவடிக்கையை எடுக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அளித்த உறுதிமொழியும் நிறைவேற்ற  இந்தியா யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை , சம்பந்த பட்ட அமைச்சர்களும் கிருஷ்ணா, சிதம்பரம் போன்றவர்கள் எக்ஸ்குளுசிவ் பெட்டி கொடுத்து ஓராண்டை கடத்திவிட்டார்கள் , உள்நாட்டு தீவிரவாதிகளான மாவோயிஸ்ட் நல்வழிப்படுத்த முடியாத அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் தீவிரவாத வழிக்கு செல்கிறார்கள் , இதுகுறித்து அரசு மத்திய படைகளை கொண்டு ஒடுக்கும் எனவும், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம் எனவும் கூறி ஏமாற்றுகிறவர்கள், அல் குவைதா தீவிரவாதிகளின் செயலுக்கு திடமான இந்தியா அரசின் நடவடிக்கை மட்டுமே தீர்வாகுமே தவிர பெட்டிகளும், அந்நிய நாட்டவரின் உதவி எதிர்பார்ப்பு பலனை தராது , எப்போது துணிச்சல் வருவது சிதம்பரத்திற்கு  இல்லையேல் திறமையான நபரை அமர்த்தவேண்டியது அரசின் கடமை. இந்தியா அரசு மும்பை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா மக்களுக்கு என்ன தீர்வு சொல்லபோகிறது.


...

பறவைகளை காப்பதில் ஓர் அழகிய கிராமம் ஆன்னியூர்

Friday, November 20, 2009

   விழுப்புரம் அருகே அன்னியூர் என்ற கிராமம் உள்ளது இக்கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி, மேனிலைப்பள்ளி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை உலடக்கிய ஒரு கிராமம் .  இக்கிராமத்தின் அனைத்து  தெருக்களிலும் தென்னை,வேம்பு,புலியன்,புங்கன் , முருங்கை உள்ளிட்ட மரங்களும் நிறைய கோயில்களும் கோவிலின் எதிரில் ஆலமரம் , அரசன் என பசுமையான மரங்களை கொண்ட  அழகிய கிராமம் அன்னியூர் .  இங்கு உள்ள மரங்களில் மாலை ஆறுமணிக்கு ஆஜராகும் காக்கைகள் , மைனாக்கள், கல்குருவிகள் என பறவைகள் பட்டாளம் ஏராளம்.  பலசூழலில் இருந்த கிராமம் இந்த பறவைகளின் வருகைக்கு பின்னர்தான் கவிஞர்களின்  கற்பனைகளில் காணுகின்ற இனிய கூக்குரல்களை கேட்டிட இன்பமாயிருக்கும் .  கிட்டத்தட்ட ஐந்தாயிரம் காக்கைகள் , இரண்டாயிரத்திற்குமேற்பட்ட மைனாக்கள்,கல்குருவிகள் , சொற்பமான குயில்கள் என இந்த கிராமத்தின் இன்பமயமான் சூழலுக்கு நாதங்களாகின்றன.
         பறவைகள் காலையில் பல்வேறு பகுதிக்கு அதிகாலையில் துயில் எழுந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன. இந்த பறவைகள் இடும் எச்சத்தினால் பல்லுயிர்பெருக்கம் வலுவடையும், இப்பகுதியில் பறவைகள் இரவில் தங்குவதாலும் , இனப்பெருக்கத்தை இங்கு செய்வதாலும் இப்பகுதி சுற்றுச்சூழல் மாசடையாமல் இயற்கையாகவே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது .  இவ்வளவு பறவைகள் வந்து தங்கவும் , இனப்பெருக்கம் செய்துகொள்ளவும் நீர்நிலைகள் ஏரிகள்,குளங்கள் இங்கு உள்ளது, மேலும் போதுமான மரங்கள்,குடியிருப்புகளில் தங்க வசதியாகவும் உள்ளது இதற்காக மக்கள் யாரும் இவைகளை துன்புறுத்துவதில்லை.
            மேலும் இங்கு பறவைகளை கல்வீசி தாக்கினாலோ, வேட்டையாடினாலோ இவ்வூர் மக்களும், ஊர்பிரமுகர்களும் துரத்தி துரத்தி அடித்துவிடுவார்கள் என அவ்வூர்மக்குள் கூறுகின்றனர். இப்படி மரம் வளர்ப்பதிலும், பறவைகளை காப்பதிலும் கிராமங்கள் தோறும் உள்ள இளைஞர்களும், பெரியோர்களும் இவைகளையும் ஒரு உயிராக நினைத்தாலே கிராமங்கள்தான் சொர்கங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அழகிய கிராமத்தை ரசிக்க விரும்புபவர்கள் விழுப்புரம் நகரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பயனித்தாலே மகிழ்ச்சிக்கடலில் மிதக்கலாம் . இயற்கையை காப்போம் இன்றும் காந்தியின் வாக்கு வாழ்கிறது .

          

ஜனநாயகத்தில் செல்லரித்த தூணான பத்திரிகைகள்

           இந்தியாவின் நான்கு தூண்களுக்கு அடுத்ததாக பத்திரிகை துறையை பெருமையுடன் சொல்லிக் கொள்வார்கள்வார்கள் ஏனெனில் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலமாக இருந்து அரசின் திட்டங்கள் , மக்களின் அடிப்படை வசதிகள் , தேவைகள் குறித்தும் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அரசு இயந்திரம் செவ்வனே செயல்பட்டு மக்கள் நலமுடன் வாழ வகை செய்வது அதன் கடமை .  ஆனால் இன்றைய சூழலில் அத்தகைய நிலையில் இருந்து சற்று விலகி மக்கள் நலனைவிட வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருமானம் பார்க்கவும் , தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதற்காக போட்டிபோட்டு வருகின்றவர்கள் ஏராளம் . ஒரு நடிகை பாய் பிரண்டு வைத்திருந்தாள் அதை இதை முதலில் படியுங்கள் என வண்ணப்படத்துடன் கோட்டை எழுத்துக்களில் போடுவார்கள் , ரஜினி நீலகலர் கொட்டு போட்டு அதில் வைலட்கலர் டைகட்டினார், சர்ரென்று வந்தார் விர்ரென்று போனார் என செய்திதாளின் தலைப்புச் செய்தியில்  போடுவார்கள் இப்படியாகிவிட்டது ஈடுகளின் நிலைமை.   அன்னைதெராசா முக்திபேறு பெற்றதற்காக விருது வழங்கியதை உள்பக்க செய்தியாகப்போட்டு நடிகை விபச்சார வழக்கில் கைதை முதல் பக்கசெய்தியாக போட்டது எவ்வளவுபெரிய கேவலம்(தினத்தந்தியில் மட்டும் அன்னைதெராசவிருது செய்தி தலைப்பு செய்தி) .  ஒரு ஆண்டிற்கு புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் பத்துலட்சம் பேரும் , உலகில் ஐம்பது லட்சம் பேரும் சாகடிக்கப்படுகிறார்கள் , எய்ட்ஸ் நோயால் ஆண்டிற்கு உலகில் முப்பத்தொரு லட்சம் பேரும் சாகிறார்கள் என்பதனை எந்த செய்தி ஊடகமும் , நாளேடும்  முக்கியத்துவம் தருவதில்லை இதுதான் செய்தி தர்மமா யோசிக்கவேண்டும்  சம்பந்தப்பட்டவர்கள் .  விற்பனையை அதிகரிக்க சினிமாசெய்திகளையும், நடிகைகளின் கிசுகிசுக்களையும் போடுவதால் இன்றைய நிலையை பத்திரிகைகள் கொட்டருக்கும் , கோழி பிரியாணிக்கும் பாடுபட்டதாக சேற்றை வாரி இறைத்ததை மறக்கக்கூடாது இவர்கள்.   நாட்டின் ஆண்கவது,ஐந்தாவது என எந்த தூணாக இருந்தாலும் அப்பவிமக்களையும் , நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர தங்கள் துறைக்கும் , மக்களுக்கும் துரோகம் செய்யவோ, கெட்டபெயரை தேடி தர நினைக்கவோ கூடாது.  வாழ்க பத்திரிகை தர்மம் வளர்ந்திடட்டும் அதன் சேவைகள்.

இத்தாலி தாலிக்கு வலி(மை) ! இந்திய தாலிக்கு இல்லை(யா)?

Tuesday, November 17, 2009

       கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் நாள் குஜராத் மாநில மீனவர்களின் படகில் மும்பை கடல்வழியாக மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் மும்பையின் அடையாளசின்னமான ஹோட்டல் தாஜ்,நரிமன் இல்லம் ,சிவாஜி சத்ரபதி தொடர்வண்டி நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் இயந்திரதுப்பாக்கிகளால் காட்டுமிராண்டிதனமாக சுட்டுத்தள்ளியது நாட்டின் பாதுகாப்பு நிலையை தீவிரமாக அறிந்தவர்களால் மட்டுமே செய்யமுடியக்கூடியது நரிமன் இல்லத்தில் தேசப்பாதுகாப்புபடை வீரர்களுடன் எள்ளளவும் அச்சமில்லாமல் சண்டையிட்டது சரித்திரத்தில் இதுஒரு மைல்கல் .  இதில் தீவிரவாத எதிர்ப்பு  படை தலைவர் ஹேமந்த் கர்கரே உடன் கிட்டத்தட்ட பனிரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்..
               இந்த நிகழ்விற்கு அரசு தீவிரமாக ஏதும் நடவடிக்கை எடுக்கமுயலாதபோது நாட்டின் மக்கள் எதிர்ப்புக்கு பிருகு உள்துறை அமைச்சரை மாற்றி , முதல்வரை மாற்றி சமாதனம் செய்யமுயன்றனர் பாகிஸ்தான் மீது கண்டிப்பாக போர்தொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர் அது நிறைவேற்றப்படுவதுபோல் சைகை காட்டி அதுகுறித்த சட்டங்கள் கொண்டுவருவதுபோல் புதிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்லி சில சட்டங்களை கொண்டுவந்தார்.  மக்களை திருப்திப்படுத்த பாகிஸ்தான் அரசிற்கு ஒரு முறை அல்ல பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை அளித்து அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியது .  இதை ஒருபொருட்டாக மதிக்காத இந்தியில் கொடுங்கள், அரபு மொழியில் கொடுங்கள் என ஏகத்திற்கும் அரசை கேவலப்படுத்தியது பாகிஸ்தான் , இதற்கும் சிதம்பரம் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறார்.  இந்த நிலையில் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் நாட்டிற்கு  ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் அதுகுறித்து துணிச்சலான நடவடிக்கை எடுக்காமல் எனக்கு வனத்துறை அமைச்சர் பதவி மிகவும் பிடிக்கும் வனத்துறை பங்களாவில் உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கவே விருப்பம் இந்த பதவி பிரதமரின் சொல்லை தட்டமுடியாததால் ஏற்றேன் எனகூறுவதும், வங்கிகடன் வழங்கபோவதும் , பள்ளிகளில் உரையாடுவதும் போன்ற மேம்போக்கான வேலைகளை செய்வதா பொறுப்புள்ள உள்துறை அமைச்சரின் வேலை வெட்கக் கேடானது.
இங்கே உள்ள தீவிரவாதத்தை ஒடுக்க வக்கட்ட்ற இவர்கள் விடுதலை புலிகளை ஒடுக்க ஆயுதம் கொடுத்து போர் நடத்துகிறார்கள், அயல் நாட்டில் உள்ள ராணுவ நடவடிக்கையை தடுக்கமுடியாது என்பவர்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு ஆயுதம் தருவார்கள் என்னகொடுமை.
             அமைச்சர் சிதம்பரம் துணிவிருந்தால் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நீதிமன்றதண்டனையை நிறைவேற்றட்டும், முபை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கைதுசெய்து தண்டிக்கட்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகி நூலகத்தில் புத்தகம் படிக்கட்டும்.  பதவி சுகம் அனுபவிக்க ஏன் மக்களை கொள்ளவேண்டும் வெட்கங்கெட்டவர்கள். சோனியா
 அருத்ததுமட்டும் தாலி பாராளுமன்ற தாக்குதலில் எட்டு பாதுகாப்பு படை வீரர்கள்,மும்பை தாக்குதலில் இறந்த பனிரனடுபெரின் தாளிக்கேல்லாம் மதிப்பில்லையா என்னடா கொடுமை தாலி கட்டாதவர்கள்  எல்லாம் தாளிக்கெல்லாம் வருத்தப்பட்டால் இந்தியா கலாச்சாரத்தில் புனிதமாக கருதப்படுவதும் உயிராக மதிக்கப்படுவதும் தாலி அதை இழந்த எம்மண்ணின் பெண்களின் தாலிக்கு என்மதிப்பில்லை இது தேசிய இல்லை சர்வதேச அவமானம்.       
     

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் சப்ளைசெய்வோம்

           கடந்த முப்பது ஆண்டுகளாக பிறந்தமண்ணில் வேலைவாய்ப்பில்,கல்வியில்,அதிகாரத்தில் உள்ளிட்ட உரிமைகளுக்காக தமிழ் ஈழ விடுதலைபுலிகள் இயக்கத்தை நிறுவி போராடி வந்தார்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் இந்த போராட்டம் நியாயமானது நிச்ச்சயம் வெற்றிபெறும் என உலகில்  வாழும் தமிழர்கள் , விடுதலை ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்தோடு  எதிர்பார்த்தார்கள்.   எதிர்பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது.
இந்திய நாட்டின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என திட்டவட்டமான நிலையில் அங்கே விடுதலை புலிகள் தலைமையிலான விடுதலை இயக்கம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததுதான்  தமிழர்களுக்கு எதிரானவர்களின் திட்டமிட்ட சதி. .
               "சுரங்கப்பதையின் முடிவில்வெளிச்சம் கிடைக்கும்,  ஒவ்வொரு போராட்டத்தின்
 முடிவில் நிச்சையம் வெற்றி கிடைக்கும்" என்பது புதுவை அன்னையின் வாக்கு.  இந்த மிகப்பெரிய பின்ன்னடைவு விடுதலை மட்டுமல்ல அரசுக்கு எதிராக மக்கள் நலனுக்காக போராடும் போராளிகளுக்கு வரலாறு காணாத விரக்தியைத்தந்திருக்கும் என்பதில் மாற்றுக்குகருத்து இல்லை.
இப்படிப்பட்ட வரலாறு காணாத பின்னடைவுக்கு அவர்களின் (அரசின்) நடவடிக்கைமட்டும் காரணமல்ல உலக  தமிழன் தாய்நாடு என்று எந்த தேசத்தை முழமையாக நம்பினானோ அந்த அரசுதான் பூகோள வரைபடத்தையும் , இரானுவ தளவாடங்களையும் ,ஆலோசனைகளையும், இராணுவ வீரர்களையும் அளித்து போரை நடத்தி தமிழ் இனத்தை அழித்தது சர்வதேச அவமானம். ஒவ்வொரு விசயத்திலும் உள்நாட்டு தமிழனுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கிடைக்காமல் செய்யும் பிறமாநில அரசுகளுக்கு சாதக இருந்து வந்த மத்திய அரசு இப்போது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழர்களை அழித்து  , அங்குள்ள எஞ்சிய மக்களை நிர்வாணப்படுத்தி சுட்டுகொன்றும், தரையில் இவர்கள் செய்த கொடுமைகளை தண்ணீரில் சிங்கள வீரர்கள் தமிழ் வாலிபனை தடியால் அடித்து கொன்றது எந்த விதத்திலும் அங்கே தமிழன் எஞ்சி வாழ அவர்கள் விரும்பவில்லை எனத்தெரிகிறது . தமிழகத்திற்குகூட  எந்தவிதத்திலும் ஈடாகாத ஒரு தீவு அங்கே சக குடிமகனான தமிழனை கொன்றுகுவித்த கொடுஞ்செயல் தமிழகத்தில் உள்ள தமிழ் தலைவர்களின் ஒற்றுமை இல்லாத சுயநல அரசியலால் சக உடன்பிறப்பை குழி தோண்டிபுதைப்பதை வேடிக்கை பார்த்த கேவலம் வேதனைதான்.
             எஞ்சியுள்ள தமிழ்மக்களை மிருகங்களைக் காட்டிலும்  படுகேவலமாக திறந்தவெளியில்  பருவமழை தீவிரத்தின் போதும் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியது கானகூடாத காட்சி. இவ்வளவு நடந்த பிறகு தமிழினத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி அரசியல் நாகரிகத்தின் தவப்புதல்வன் என்று காட்டிக்கொல்லுபவர் இந்த அறிய வாய்ப்பில் சனநாயகத்தின் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கூட்டணிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி சப்பக்கட்டை கட்டி அங்கே ஒரு இன்பச்சுற்றுலா நடத்தி பாராட்டு நட்பை சிங்கள என வெறியன் ராஜபக்ஷேவுடன் கைகோர்த்து,பொன்னாடைபோர்த்தி வந்தது பார்த்த தமிழன் நெஞ்சில் வேலைபைச்சியது.  அடங்க மறு அத்து மீறு என்று தன இன இளைஞர்களை ரத்தம் கொதித்து வீறுகொண்டெழச் செய்த திருமாவளவன் அங்கே சென்றதும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனதுதன் வேதனை .  இங்கே வீதிகளில் மேடைபோட்டு காதுகளை கிழிக்கும் இவர் அங்கே இவர் பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்று இருந்திருக்கமாட்டார் என நக்கலாக பெசியதைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாக சொல்லிவிட்டு இங்கேவந்து வீராப்பாக பேசுவது ஆர்ப்பாட்டம் செய்வது இங்குள்ள தமிழர்களை கேனப்பயனாக நினைத்திருப்பதுதானோ எனத்தோன்றுகிறது . தமிழனுக்கு எந்தவிதத்திலும் உறவில்லாத நார்வே நாட்டு அரசு மனிதாபிமானத்தை காக்க பொரடியதிலும் நாம்காட்டாதது குறித்து வெட்கப்பட நமது தலைவர்கள் தயாரில்லை .  இந்த நிலையில் நாடாளுமன்ற குழு இந்தியா திரும்பியதும் நான்கே நாளில் விடுதலை என போஸ்டர் அடித்தது வெட்ககேடானது .  தமிழர்களுக்கு விடுதலை, தனி ஈழம் என பேசியவர்கள் முள்வேலியில் இருந்தவர்களை விடுதலை செய்யவேண்டி குழு அனுப்புவதும்,விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியதற்காக போஸ்டர் அடித்து விடுதலை வாங்கித்தந்ததாக விளம்பரம் செய்கின்ற கேவலநிலையில் போகின்ற தலை தமிழக தலைவர்களின் பார்வையும் உணர்வும் சுருங்கிப்போனது வீரம் செறிந்த தமிழனுக்கு தீராத அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
             ஒருபோராளி இயக்கம் தோற்றுவிட்டதற்கு இன்னொரு போராளி இயக்கம் வருத்தப்பட்டது சிறிது ஆறுதல் அளிக்கிறது.  மேற்கு வங்கம் , பிகார் போன்ற வடமாநிலங்களில் இயங்கிவரும் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் அந்தபகுதி மக்களின் அடிப்படை தேவைகளைபூர்த்தி  செய்யத அரசுக்கு  எதிராகப் போராடிவருபவர்கள் இனவிடுதலையில்  பின்னடைவை  சந்தித்த  விடுதலைபுலிகளுக்கு  aayuthangal சப்பளை  செய்வோம்  எனவும்  அவர்களின்  விடுதலைக்கு  தேவையான   உதவிகளை  யார்தடுத்தாலும்  செய்வோம்  என அறிவித்திருப்பது  மகிழ்ச்சியானது  ஏனெனில்  ஒரு இயக்கத்தின்  முயற்சி  தோற்றால்  அதைவைத்து  அனைத்து  விடுதலை மற்றும்  அரசுக்கு  எதிரான  நியாயமான  போராட்டங்களை  தோல்வியடைய செய்துவிடுவது  வாடிக்கையாகிவிடும் .


             

உணவில் விஷம் கலக்காதீர்: மன்மோகனுக்கு

Saturday, November 14, 2009

               விவசாயம் தமிழனுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை முறையில் செய்வது பழக்கப்பட்ட ஒன்று .   சுவையான காய்கறிகள் , தானியவகைகள் என மனித இனம் மகிழ்ச்சி  கொள்கிற ஒரு உணவினை தந்தவன் தமிழன் என்றால் அது மிகையாகாது .  யானைகட்டி போரடித்து உலகிற்கு உணவுபடைத்தவன் தஞ்சை தமிழன்.   இப்படி தமிழன் அறுசுவை அரோக்கிய உணவினை அழித்தவனுக்கு மிகப்பெரிய சோதனை வந்துள்ளது .  விதைகளை விவசாயி வைத்திருந்தாள் அது சட்டப்படி குற்றஞ் என்கிற சட்டத்த்டினை மத்திய அரசு கொண்டுவதுள்ளது.  அதைவிட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்ய அமெரிக்காவைசேர்ந்த மாசாண்டோ,மகிக்கோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது இந்தியாஅரசு. அதுமட்டுமல்ல இதுகுறித்து மக்களிடமோ, தொண்டு நிறுவனங்களிடமோகருத்ததுஎதுவும்கேட்காமல் நேரடியாக விவசாயத்திற்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.
'           இதுகுறித்துமுன்னால் மத்தியஅமைச்சர் மருத்ததுவர் இரா.அன்புமநிரமதாசு பிரதம மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
            பி.டி. கத்தரிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும் எனில் அது இந்தியாவில் அனுமதிக்கப்படும் முதல் மரபணுமாற்றப்பட்ட உணவு பயிராகவும், நச்சு பி.டி.மரபணுவைக் கொண்ட மரபணுமாற்றப்பட்ட கறிக்கு உலகில் அளிக்கப்படும் முதல் அனுமதியாகவும் இருக்கும்.  சுற்றுசூழல் மற்றும் கானகத்துறை அமைச்சகத்தின்  கீழ் செயல்படுகிற உயர்நிலை ஒழுங்குமுறை அமைப்பான மரபணு போரியல் ஒப்புதல் குழு (GEAC) அக்டோபர் 14 ஆம் தீதி நடைபெற்ற அதனுடைய கூட்டத்தில் , மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
              அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய விதை உற்பத்தி  நிறுவனமான மான்சான்ட்டோ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான  மஹிகோ நிறுவனம்தான் இந்தியாவில் இந்த பி.தி.கத்தரிக்காயை உருவாக்கி உள்ளது.  கத்தரிக்காய் உள்ளே ஒரு பாக்டிரிய மரபணுவை செலுத்தி இந்த பி.தி.கத்தரிக்காய் மஹிகோ நிறுவனம் தயாரித்துள்ளது.  அப்போதுதான் கத்தரிக்காய் செடிக்குள் ஒரு புதிய நஞ்சு உருவாகும் .  அந்த நஞ்சு , பயிரை (பழம்,மற்றும் வேரை) சாப்பிடும் குறிப்பிட்ட சில பூச்சிகளை கொள்ளும் நஞ்சாகும்.
               கத்தரிக்காயின் தோற்றத்துக்கும் பல்வகைப் பெருக்கத்துக்கும் இந்தியாதான் மையம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உருவாக்குவதை நெறிப்படுத்துவதற்கான எந்த கொள்கை கட்டமைப்பையும் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இந்த பி.டி. கத்தரிக்காயை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட பயிரின் தோற்றத்துக்கும், பல்வகை பெருக்கத்துக்கும் மையமாக இருக்கும் உலகின்  எந்த ஒரு பகுதியிலுள்ள , எந்த மரபணு மாற்றப்பட்ட பயிரும் பயிரிட அனுமதிக்கப்படுவதில்லை .  ஆனால் இந்தியா,விவேகமட்ட்ற முறையில் பி.டி.கத்தரிக்காயின் வணிக வெளி ஈட்டு நடிமுரைகளை மேற்கொள்ளதொடன்கியிருக்கிறது.  நம் நாட்ட்டில் 2500 க்கும் மீறப்பட்ட கத்தரிக்காய் வகைகள் உள்ளன.  வளம் மிக்க இந்த பல்வகை பண்புதான் மனிதகுலத்தின் மரபாகும் .  மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காய்  அனுமதிக்கப்படுமானால் அந்தமரப்பு சீரழிந்துவிடும்.
                ஒவ்வாமை , சிருநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளுக்கு பதிப்பு , உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பு பாதிப்பு போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்குடிய மரபணுவை மாற்றப்பட்ட பயிர்கள் .  பி.டி. கத்த்டரிக்காயும் அதற்கு விதிவிலக்கல்ல.  இந்த மரபணு மாற்றப்பட்ட பயிரை அனுமதிப்பதற்குமுன்பாக சுதந்திரமான ஆய்வு எதையும் இந்தியாவின் ஒழுங்குமுறை அன்மைப்பு மேற்கொள்ளவில்லை பி.டி. கத்தரிக்காயின் உயிரி பாதுக்காப்பு தொடர்ச்சியான எல்லா ஆய்வுகளும் இந்த பயிரை உருவாக்கியவர்களால் நடத்த்தப்பட்டுள்ளனஅல்லதுஅவர்களால்அமர்த்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீண்டகால கண்ணோட்டத்திலான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
                  2010  ம் ஆண்டில் முதல் இரு மாதங்களில் கலந்தாய்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுல்லத்தை வைத்து பார்க்கும்போது இந்த விஷயததத்டிள் இக்கிய முற்போக்கு கூட்டணி அரசு  முன்னேச்செரிக்கையுடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதுதான் விரும்பத்தக்கது.  அணித்து மரபணு மற்ற பயிர்களின் சுற்றுசூழல் வெளிஈட்ட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்+

கடன் தொல்லையா-இதோ எளிய வழி?

Thursday, November 12, 2009


         மனிதன் இறைவனை வழிபட நினைப்பது ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் மட்டுமே என்பதால் இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு பிரச்னையை விட்டுவிடுவதாக ஆன்றோர்கள் கூறுவது வழக்கம் .  அதுவும் கடன் தொல்லை என்றால் சொல்லவே வேண்டாம் இரவில் தூங்கமுடியாது , நிம்மதியாக சாப்பிடமுடியாது  இந்த பிரச்சனைகளே உச்சத்தை தொடும்போது தூக்குபோட்டு தற்கொலை , மருந்து குடித்து தற்கொலை என வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்து தற்கொலை முடிவுக்கு செல்லும் அளவிற்கு கொடுமையானதுதான் கடன் தொல்லை.
           இந்தகடன் தொல்லைகளை தீர்க்க பெரும்பாலும் முயற்சித்து பின் கடவுளை நாடுவார்கள் .  அப்படி கடன்களை தீர்ப்பதில் உயிர்களை காக்கும் அவதாரமான சிவபெருமான் அருள்பாலிக்கும் திருத்தலம்தான் விழுப்புரம் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் உள்ள அருள்மிகு . பாலேசுவரர்.  இங்கு தனது மனைவி பாலாம்பிகையுடன் அருள்பாலிக்கும் சிறப்பைப் பெற்றவராகிறார் மூலவரான பாலேசுவரர்.
             சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் மூலவராக தோன்றி அருள்பாலித்து கொண்டிருந்ததை முன்னோர்கள் சிவகதி அடைந்தவர்களின் கூற்றை செவி வழியாக கேட்டு அறிந்ததுதான்.  காலப்போக்கில் இத்திருத்தலம் சிதைந்து அழிந்து மண்  மேடானது .  அப்பொழுது இவ்வூரில் வசித்து வந்த ரங்கா பைத்தியமாக அலைந்து திரிந்து இத்திருக்கோவிலுக்குள்  சென்று பாம்புகள் சூழ்ந்த அப்புற்றை அன்றாடம் சிறிது சிறிதாக பல வருடமாக தோண்டி தோண்டி அப்புற்றை  அகற்றி அதனுள் இருக்கும் சிவலிங்கத்தை ஊருக்கு வெளிக்காட்டினார் .  அன்றுமுதல் அவருக்கு பைத்தியம் தெளிந்து அவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டு பிள்ளைபேறு அடைந்து சிவகதியை அடைந்தார், இவருடைய உறவினர்கள் இன்றும் இவ்வூரில்  வாழ்ந்து வருகிறார்கள் என்பது உண்மை. புற்றிலிருந்து வெளிப்பட்டதால் புற்றீசுவரர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
             கடனை நிவர்த்தி செய்யும் தளமாக கும்பகோணம் வட்டம் திருச்செரையிலும், திருவாருரிலும் கடன் நிவர்த்தி ரின லிங்கேசுவரராக (கடன் நிவர்த்தி ஈசுவரர்) உபமூர்த்தி உட்பிரகாரத்தில் அமைந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள் .  ஆனால் சிறுவலையில் மூலவர் கடன் நிவர்த்திளிங்கமாக அருள்மிகு. பாலேசுவரர் காட்சி கொடுப்பது நாமெல்லாம் செய்தபாக்கியம்.  கடன் தொல்லையால் துன்புறும் ஆன்றோர்கள் ஒருமுறை திருமுறைகண்ட  இத் திருக்கோவிலுக்குள் வந்து ஈசனை வணங்கினால் கடன்தொல்லை இல்லாமல் இன்புற்று வாழலாம்.
               இத்திருத்தலத்தின் மார்க்கம்:
        விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருள்மிகு பணங்கட்டிசுவரர் தளத்திற்கு மேற்க்கே 15 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் தளத்திற்கு 45 கி.மீ. தொலைவிலும், திருவாமாத்தூர் அருள்மிகு.அபிராமேசுவரர் திருத்தலத்திற்கு 6 கி .மீ. தொலைவிலும் , பணமலை அருள்மிகு . தாளகிரீசுவரர் தளத்திற்கு தெற்க்கே 10 கி.மீ. தொலைவிலும் மையமாக உள்ளது.  இதில் அருள்மிகு தாளகிரீசுவரர் திருத்தலம்,  அருள்மிகு அபிராமேசுவரர் திருத்தலம் , சிறுவாலை அருள்மிகு பாலேசுவரர் திருத்தலங்கள் ஒரே சாலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  வழிபட நினைப்பவர்கள் மூன்று திருத்தலங்களையும் ஒரேநாளில் வழிபட முடியும் என்பதை அறியவும்.
             பக்தர்கள் பக்தியுடன் வழிபாட்டு அருள்மிகு .  பாலேசுவரனின் அருளைபெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger