அரங்கேறும் பணநாயகம் குழப்பத்தில் மக்கள்

Saturday, March 13, 2010

           தமிழகத்தில் உள்ள தருமபுரிமாவட்டத்தில் பென்னாகரம் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் இருபத்திஏழாம் தேதி நடைபெற உள்ளது.  இங்கு தி.மு.க., ஆ.தி.மு.க., பா.ம.க. தே.மு.தி.க.வேட்பாளர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பாட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளனர்.
            கடந்த முறை தேர்தல் தேதி அறிவித்தவுடனே தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக முடிக்கிவிடப்பட்டு தனியாத்துப்போட்டி என அதிரடியாக அறிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் .  தி.மு.க.வேட்பாளராக மறைந்த எம்.ல்.ஏ. மகன் இன்பசேகரன் அறிவிக்கப்பட்டு கடுமையான வறட்சி வேலையின்மை காரனகளால் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் பகுதிகளில் வசித்துவரும் சுமார் 25,000  வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டியதாக செய்தி .பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் மணியின் மகன் தமிழ் குமரன் , ஆ.தி.மு.க. வேட்பாளராக அன்பழகன்,தே.மு.தி.க.வேட்பாளராக பாட்டளிமக்கள் கட்சியிலிருந்து விலகி சென்ற வழக்கறிஞர் போட்டியிட்டாலும் பென்னகரத்தை போருத்தவாரை ஆளும் கட்சியின் இன்பசேகரனும், பாட்டளிமக்கள் கட்சியின் தமிழ் குமரனும் களத்தில் சரிநிகர் போட்டியாளர்கள்.
          ஆளும் கட்சியின் வேட்பாளர் இன்பசேகரன் ஆளும் அதிகாரம்,பணம் இவைகளை நம்பியும் , பா.ம .க.வின் வேட்பாளர் தமிழ்குமரன் தனது தந்தையின் சாதனைகள்,சாதி ஓட்டுக்கள் இவைகளை நம்பி நிற்கிறார்.
தொகுதியில் நடைபெறும் சம்பவங்கள் சில:
           கடந்த இரண்டுமாதங்களாக ராமதாஸ் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக சென்று வெற்றிலை பக்கு வைத்து , அங்குள்ள மக்களின் வேலைகளை பகிர்ந்து ஒட்டுவேட்டையாடிவருகின்றனர். கடந்த இருமாதங்களாக அமைதிகாத்து கடந்த இருவாரங்களாக சிலிர்த்தெழுந்த ஆளும் திமுக. சேலைகள் , சாக்கெட்டுகள் , வேட்டிகள் என இனாம் பொருட்கள் கொடுத்தான் , பிரியாணி, கலர் சாராயம் என விருந்து வைத்தும் தொகுதியில் குக்கிராமங்கள் விடாது கலக்கி விட்டு காவலர்கள் ஏவிவிட்டு சோதனை சாவடிகளை அமைத்து விட்டு ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.
              கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆரம்பித்த மக்களுக்கான பணப்பட்டுவாடா ஒரு ஓட்டுக்கு ஆயிரம் என இரவு பகலாக நடந்து முடிந்தது.கடந்த இரு திங்களுக்கு களத்தில் சுறுசுறுப்பாக ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதிமுக.வினர் நகர பகுதிகளில் மட்டும் வளம் வருகின்றனர்.
இடைத்தேர்தலின் சனநாயகம்:
              இடைதேர்தல் என்றால் ஆளும் கட்சி மட்டுமே வெற்றிபெறும் நிலை இன்று உள்ளது. இடைதேர்தல் என்பது ஆளும் ,எதிர் கட்சிகளுக்கு மக்கள் மனநிலை அறிய உதவும் தேர்தல்.ஆனால் கடந்த ஆதிமுக காலத்தில் அரக்கோணம்,சைதாபேட்டை என தமிழகத்தின் பல இடைத்தேர்தலில் அதிமுக. வென்றது ஆனால் பொது தேர்தலில் தோல்வியடைந்தது.  அதற்கு காரணம் அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றதுதான்.அதேநிலை தற்போதும் தொடருகிறது.  சோதனை சாவடிகளில் உள்ள காவலர்கள் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளை சோதனை செய்வதும், ஆளும் தரப்பின் தேர்தல்விதி மீறல்களை கண்டுகொள்ளாமல் விடுவது என்ன ஜனநாயகம்.  எதிர்கட்சிகளின் புகார்கள் மீதான நடவடிக்கைகளை முடிக்கிவிட தேர்தல் ஆணையம் முனைப்புகட்டிடவேண்டும் அப்போதுதான் ஆளும் தரப்பின் வரம்புமீறல் கட்டுக்குள் வரும் .  இதே நிலை பொது தேர்தலிலும் தொடரவேண்டிய நிலைக்கு மக்கள் மனநிலை தள்ளப்ப்படுமானால் நாட்டில் நல்ல மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஊழல் பேர்வழிகளிடம் நாடு சிக்கினால் மக்கள் பேராபத்தில் சிக்குண்டு வறுமையும் , வேலைவைப்புமின்றி அவதியுறும் நிலைக்கு ஆளாவார்கள் . வாழ்க ஜனநாயகம் . வெல்லட்டும் மக்கள் எண்ணங்கள்.

தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது?

Friday, March 12, 2010

               புவி 29 சதவிகிதம் நிலப்பரப்பையும் 71 சதவிகிதம் நீர்பரப்பையும் கொண்டது .  புவியிலுள்ள நீர்பரப்பில் 97 சதவிகிதம் உப்புநீராகவும் மீதமுள்ள 3 சதவிகிதம் நன்நீராகவும் உள்ளது.  வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும்,தொழில் வளர்ச்சிக்கும்,சுற்றுச்சூழல் உள்ளிட்ட மனித வள மேம்பாட்டிற்கு  நன்னீர் தேவைப்படுகிறது .   நன்னீர் தட்டுப்பாடு , தேவையை காட்டிலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது .  ஆற்றுப்படுகை,ஏரிகள்,குளங்கள்,புவியின் அடிப்பரப்பு,துருவப்பகுதிகளில் உறைந்துள்ள பனிப்பாறைகளில் நன்னீர் உள்ளது.
நன்னீர் தட்டுப்பாடு தேவையைக்காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது இதற்கு மக்கள் தொகை பெருக்கம் , தொழில் சாலைகள் பெருக்கத்தினால் அவைகளுக்கு தேவைப்படும் அளவுக்கதிக நன்னீர், பெருகி வரும் நகரமயம் ,நதிகளில் கலந்துவிடும் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகளால் அழிந்துவரும் நன்னீர் ; இவைகளால் நன்னீரின்  அளவு குறைந்து விடுகிறது.
உலக நன்னீர் நாள் :
           மார்ச் 22 உலக அளவிலான நன்னீர் நாளாக கடைபிடிக்கப்படுக்கியறது .  இதில் நன்னீரை  பாதுகாத்தல் ,மழை நீரை சேமித்தல் , தண்ணீர் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
           தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு திரவப்பொருளாக  மட்டுமே பார்க்கக்கூடாது அது இப்புவியில் உயிர்கள் நிலைத்து வாழ அடிப்படை ஆதாரம், இதை பாதுகாப்பதும், சிக்கனமாக செலவிடுவதும் சாதாரண குடிமகன் முதல் முதன்மை குடிமகன் வரை ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் தேவைகளை விட்டுசெல்லும் பொறுப்பும் ஆகும்.
 அரசின் கொள்கையும் மக்களின் தண்ணீர் தேவையும்:
              மக்களுக்கு விவசாயம்,குடிக்க உள்ளிட்ட வீட்டு தேவைகளுக்கு சுத்தமான , பாதுகாப்பான நன்னீரை தரவேண்டியது அரசின் கடமை என்பதனை அரசுகள் உணரவேண்டும் இதனை தேர்தல் நேர வாக்குறுதிகளாக மட்டுமே பயன்படுத்தாமல் ஆயுட்கால கடமையாக செய்யவேண்டும். பெரும்பாலும் நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தப்படும், நச்சு ரசாயனங்கள் உற்பத்திசெய்யப்படும் தொழிற்சாலைகள் முழுவதும் ஆற்றின் கரைகளிலேயே கட்டுவதற்கு அனுமதி கேட்கப்படும்பொழுது அதை அரசுகள் அனுமதிக்கப்படக்கூடாது , ஏற்கனவே செயல்பட்டுவரும் தொழிற்சாலைகள் தாங்கள் வெளியேற்றிவரும் நச்சுக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டபிறகு நீர்நிலைகளில் கலக்கவிடவேண்டும், அனுமதி முடிந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது.
பல்லுயிர் பெருக்க பேரழிவு:
             தொழிர்சாளைகளிலிருந்து வெளியேறும் நச்சுரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்கவிடுவதால் ஆற்றின் மூலம் கடலில் கலக்கும் பொது கடலிலுள்ள மீன்கள் ,டால்பின்கள், திமிங்கலங்கள் ,பவளப்பாறைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.  ஆறுகளில் கலக்கின்ற நச்சுரசாயனகழிவுகள் அருகில்(நதிக்கரை) உள்ளஏரிகள்,குளங்கள்,கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில்  கலப்பதால் மக்களின் குடிநீர் மாசடைந்து மனிதா வளமும், பிற உயிர்களும் பல்வேறு உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு அழிவையும் இதன்மூலம் புவியில் மனிதவளம் அழிவை சந்திக்கிறது.
              மனித வளம் நிலைத்தவளர்ச்சியடைய சுத்தமான நன்னீரை பாதுகாப்பதும், சேமிப்பதும் இன்றியமையாதது இதை அரசின் கொள்கையாகக் கொண்டு அதிக நிதி ஒதுக்கி நீர் தேவையை தன்னிறைவு செய்வதில் முனைப்பு காட்டிடல் வேண்டும்.

    

நித்தியானந்தா கம்பிகள் எண்ணட்டும் புத்திகள் வரட்டும்

Sunday, March 7, 2010


            "பெற்ற தாயாக இருந்தாலும் நள்ளி
ரவில் சந்திக்காதே " இது ஆண்மீகப்பநிகளில் சிறப்புற தன்னை அரநித்து தன்னைப்போலவே உன்னத சீடரை வளர்த்து திருமணத்திற்கு வற்புறுத்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே எந்தவித களங்கமுமின்றி இந்தியாவின் சாராம்சத்தையும், இந்துமதத்தின் சாராம்சத்தையும்,பாரம்பரியத்தினையும் உலகரியச்செய்து வாழ்ந்து மறைந்த விவேகானந்தர் போன்ற ஆண்மீகத்துரவிகள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி நமது இந்திய பூமி.
              சமீப காலமாக கடவுளின் அடிமைகள் என்று ஆண்மீகப்பனிகளில் ஈடுபடும் ஆசாமிகள் பணத்தின்மீதும்,புகழின்மீதும் மோகம்கொள்ளும் நிலைக்கு மீறி கள்ள உறவுகளில்  ஈடுபட்டு ஆன்மீகத்திற்கும் இந்த மண்ணின் பண்பாட்டிற்கும் ஊறுவிளைவித்து வருவது பிரேமானந்த ,கல்கி, போன்ற சாமியார்களும் , தேவநாதன் போன்ற குருக்கல்களும் இறைவன் இருக்கும் கருவறை , இறைவனாக தங்களை வணங்கும் பீடங்களில் தங்களது குறைகளை சொல்லி நிவர்த்தி செய்துகொள்ள வரும் பக்தர்களை பொய்யான வாக்குறுதிகளை சொல்லி அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடி கடவுளின் கற்பகிரகத்தின் புனிதத்தை கெடுத்து , யாதுமறியாத பெண்களையும் பாவசெயலுக்கு ஆளாக்கி வருவது நீண்டகாலமாக நடந்துவருகிறது. தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் இவர்களின் லீலைகள் அம்பலமாகிவருகிறது.
கொடியவர்களின் கூடாரமாகிவிட்ட கோவில்கள்:
                "கோவில்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ,கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது" என்ற பராசக்தி படத்தின் வசனத்திற்கு வக்காலத்து வாங்கும் நிலை ஏற்பட்டு நெடுநாளாகிவிட்டது.
தலைப்பாகை கட்டியவனெல்லாம்:
        புலியைப்பார்த்து பூனை சூடபோட்ட கதையாகிவிட்டது திருவண்ணாமலையை சொந்த ஊராகக்கொண்ட நித்தியானந்தா நிலை.   இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக தலம் திருவண்ணாமலை , இங்கு மலைவடிவாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மக்களை காக்கிறார் பரம்பொருளான அருணாச்சல ஈசுவரர்.  இவரின் லிங்கத்தையும் விவேகானந்தரின் மாதிரி தலைப்பாகை இவற்றை வைத்து  தியான மடங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் பணம், கடவுளாக தன்னை சித்தரித்து வானலாவபுகழ், ஏராளமான சொத்துக்களை , லட்சக்கணக்கான அப்பாவிமக்களை நம்பவைத்து சராசரி மனிதனைவிட கேவலமான முறையில் தன் அந்தரங்க லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளது சமீபத்தில் சபை அறிந்தது  ஒரு தனியார் தொலைக்காட்சிகளின் மூலம்.
ஆன்மீகமும் ஆகமவிதிகளும்:
                    
ஆன்மீகத்தின் பெயரால் சிலர் இந்தியாவின் சிறப்புகளை உலகறியசெய்ததன் மூலம் இறந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணம் போலிகள் உருவாக நேர்ந்தது. அப்பாவி மக்கள் ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குமேல் செல்ல அனுமதி மறுப்பது , குறிப்பிட்ட நபர்கள் கடவுள் சிலைகளை தொடுவதற்கும்  பல்வேறு நிலைகளில் ஆகம விதிகள் ஆழ்டாரம் , அனுழ்டாரம் என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள் பெண்களை கடவுளுக்கருகில் துகிலுரிந்து நாசம் செய்து இச்சை தீர்த்துள்ளனர்.   கடந்த இரண்டாம் நாள் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான செய்திகளில் நித்தியானந்தா நாடிகள் ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்துள்ளார் மேலும் பல நடிகைகளை தம் வலையில் வீழ்த்தி இச்சை தீர்த்துள்ளார் .  
சட்டம் தன் கடமையை செய்யட்டும்:
             கடவுள் பெயரால் ஆண்மேகத்தினையும், மக்கள் நம்பிக்கையையும் பாழ்படுத்தி வரும் போலிகளை , போலி நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .  நித்தியானந்தா , ரஞ்சிதா உள்ளிட்ட புகாரில் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டிக்க சட்டம் தயக்கம் காட்டிடவேண்டாம். இப்படிப்பட்ட கயவர்களெல்லாம் கம்பிகள்  எண்ணட்டும் புத்திகள் வரட்டும்.

தமிழகத்திற்குள் பவானி இனி பவனி வருமா

Friday, February 26, 2010


       நீலகிரி மலையின் உச்சியிலிருந்து உற்பத்தியாகி தமிழ்நாடு,கேரளா ,கர்நாடக மாநிலங்களில் பயணிக்கிற நதிதான் பவானி.217 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாகும் .  நதியின் நீளத்தில்
        தமிழகத்தில் 87 சதவீதமும்,கேரளாவில் 9 சதவீதமும்,கர்நாடகாவில் 4 சதவீதமும் ஓடுகின்ற இந்த ஜீவனதியை ஜீவனமில்லாமல் செய்ய கேரளா முயற்ச்சிக்கிறது.
       பவானி நதி தமிழகத்தில் பாசனத்திற்காக ,குடிநீருக்காக பெரும்பங்கேற்கும் மாவட்டங்கள் கோவை,ஈரோடு ஆகிய மாவட்டங்கள் . பயன்பெறும் முக்கிய நகரங்கள் முக்காலி,ஆதிக்கடவு,கூடப்பட்டி,மேட்டுப்பாளையம்,பவானிசாகர்,சத்தியமங்கலம்,ஆப்பகூடல்,ஆவூடையப்பாரி ,பவானி.
இந்த முக்கிய நகரங்கள்,கிராமங்கள்  உள்ளிட்ட ஏராளமான மக்கள் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியுள்ளனர் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீர் தேவையை நிறுத்த கேரளா அரசு அதன் எல்லையில் புதிய அனைகட்டிதடுத்திட முயல்கிறது .   சம்பந்தப்பட்ட தமிழக மக்களை ஏமாற்ற முயலும் கேரளாவை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைஎடுக்காமல் ஏற்கனவே புதிய அணையை முல்லைபெரியார் அணைக்கு கூடுதலாக கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறி வருகிறது.  இந்நிலையில் பவானியும் இனி தமிழகத்திற்குள் பவனி வருமா தமிழகத்தின் மேற்குமாவட்ட மக்களை காக்குமா என்பது கேள்விக்குறிதான். சம்பந்தப்பட்ட மாநில மக்களின் அல்லது அரசின் ஒப்புதலின்றி அணைகட்டும் கேரளா அரசின் நடவடிக்கை நீர்வளபாதுகப்பு சட்டம் (மத்திய அரசு) ,உச்சநீதிம்ற உத்திரவு மீறல் இவற்றிற்கெல்லாம் தமிழக அரசின் முடியாதனம் மக்களுக்கு விடியளைத்தருவது காலத்தின் கையில்.

?














      

கொள்கையற்ற அரசியலால் விலைவாசிஉயர்வும்,வறுமையும்


          நாட்டின் பொதுமக்களை சமீபகாலமாக வாட்டிவதைக்கிற விஷயம் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் விஷம் போல கட்டுக்கடங்காமல் ஏறிவருவதுதான்.  குழந்தைகளுக்கு தரும் பால் சமையலுக்கு பயன்படும் உப்பு ,காய்கறி , பருப்பு,சர்க்கரை,அரிசி,எண்ணெய் போன்றவைகளின் விளைஎற்றாம் நடுத்தர குடும்பங்கள் , ஏழைக்குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது.  உணவகங்களில் சாப்பிட சாதாரண ஓட்டல்களில் ரூ.25-35, பெரிய ஓட்டல்களில் 50 ரூபாய் முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற நிலையில்.   ஏழை நடுத்தர குடும்பங்கள் மூன்று வேலை நல்ல சத்தான சாப்பாட்டை சினிமாக்களில் காணவேண்டிய நிலையாகிவிடும் என தோன்றுகிறது. வசதிபடைத்த  பணக்கார மனிதர்கள் ஒருகார் வாங்கினால் இன்னொரு காரை வாங்கும் நிலை நாட்டில் வளர்கிறது.  ஆனால் ஏழை இன்னும் ஏழையாகவே கீழிறங்கும் நிலை நிலவுகிறது.
                 இந்தியாவில் சில வருடங்களாக விலைவாசி ஏற்றம் குறித்த பல கருத்துக்கள் உலா வருகிறது.  ஆனால் அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாகிவிட்டதால் ,வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,கடத்தல் ,பதுக்கல் உள்ளிட்ட செயல்களால் விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறிவருகிறது.   இதை தடுக்க பொதுவழங்கள்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு தவறியது விளைஎற்றத்திற்கும் வறுமை அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்தது.
கொள்கையற்ற வறுமை ஒழிப்பு திட்டம் தோல்வி:
            மத்திய ,மாநில அரசுகள் வறுமை ஒழிப்பிற்கு வாக்குறுதிகள் ,திட்டங்களை பொதுமக்களுக்கு அளிப்பார்கள் ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான திடனான கொள்கையை நடைமுறைப்படுத்த்தும்வரை  விலைவாசி உயர்வும்,வறுமையும் தீவிரமடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  


.புத்தரை தகர்த்த வன்முறையின் நினைவுதினம்

Thursday, February 25, 2010


" ஆசையே அனைத்து துன்பத்திற்கும் காரணம்" இந்த இரத்தின சுருக்க வாசகத்தால் மட்டுமல்ல தன் வாழ் நாளிலும் கடைபிடித்ததால் உலக உயிர்களிடத்தில் அன்புசெலுத்தி வாழ்ந்த இராகுலன் என்ற கௌதம புத்தர் உலகில் அமைதியை விரும்பும் உயிர்களால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஆலயங்கள் எழுப்பி வழிபட்டனர். ஆனால் உலக உயிர்களிடத்தில் அன்புசெளுத்திய நாள் வரை இவ்வுலகில் அமைதி இருந்துவந்தது கால மாற்றங்களால் மதநல்லிணக்கம் சிதையதொடங்கியது, உயிர்கள் வதைக்கப்படுவது அரங்கேரத்தொடங்கியது கோரத்தின் உச்சம் மக்களிடம் இருந்து கடவுள்கள் வரை பிரிவினையை மனிதா குளம் வரையறுத்தது . இதன் விளைவாக வன்முறை,தீவிரவாதம் தலை தூக்காரம்பித்தது .

உயிர்களை நேசிக்க சொன்ன தன்னை கொள்ளவந்த மனிதனை தன்சீடனாக ஏற்ற புத்தகடவுளின் சிலைகளை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் டைனமைட் குண்டுகளை வைத்து கடந்த 2001 பிப்ரவரி 26 நாளன்று தகர்த்து உலக அரங்கில் தங்களது கடவுளான அல்லவே ஏற்காத தீமையை செய்தனர்.



அதேபோல் புத்தமதத்தை பின்பற்றி வாழ்ந்துவரும் துறவிகளும் , மக்களும் நிறைந்த புத்தமத நாடு என்ற பெயர் பெற்ற இலங்கை தேசத்தில் தமிழ்மக்கள் இறக்க்கமற்றமுரையில் கொன்று குவிக்கப்பட்ட துயர நிகழ்வு கொள்கைமுரண்பாடுமட்டுமல்ல , மனிதநேயமற்ற நிலை இதற்கு புத்தமத துறவிகள் துரவரம்பூண்டும் பிரையிர்களிடத்தில் அன்புசெலுத்த சொன்ன புத்தரின்வாக்கு பிரையிரின் இரத்த்த்தைக்குடிக்கின்ற வெறியாக உருவெடுத்தது உலகில் புத்தமதம் துரவிகளுக்குமட்டுமல்ல பின்பற்றுகிறவர்களுக்கும் நல்லதல்ல . புத்தம் சரணம் கச்சாமி அல்ல புத்தம் மரணம் கச்சாமி.





  

மரபுவழி விவசாயத்தை அழிக்கவேண்டாம் -ரமேஷ்

Thursday, February 18, 2010





           இந்திய அரசு சுற்றுசூழல் துறை மரபணுமாற்றம் செய்யப்பட பயிர்களை அனுமதிக்க சம்மதம் தெரிவித்து நெல்,பருத்தி பயிர்களை சோதனை முறையில் இந்திய வயல்வெளிகளில் வளர்ந்தநேரத்தில் அதன் தீமைகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் ,இயற்கை  விவசாய அறிவியலார்கள் இந்த செயலுக்கு காரணமான அமெரிக்காவின் மான்சாண்டோ,மகிக்கோ நிறுவனங்களுக்கு எதிராகவும் , மரபணு மாற்றம் செய்தவிதைகளை அனுமதிக்கக்கூடாது என இந்திய மற்றும் மாநிலரசுகளை வலியுறுத்தி போராட்டம்,ஆர்ப்பாட்டம்,பேரணிகளை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர் .
மரபணுமாற்றம் செய்தவிதைகளால் விவசாயிகளின் பாதிப்புகள்:
             மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ,பருத்திவிதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகள் இயற்கையாக மண்ணில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து மண்ணின் வளத்தை கெடுத்தும், குறைவான விளைச்சளைமட்டுமே தந்தது , இந்த விதைகளை பயன்படுத்தி விவசாயத்தி செய்யும் அடுத்தடுத்த முறைகளில் அதிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சுகொல்லிகளை விவசாயிகள் வாங்க வேண்டியிருந்தது .
              மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்த நிறுவனங்கள் இந்த விதைகள் பூச்சிகளால் பாதிக்கப்படாது மாறாக தண்டு புழு ,காய்புழு இவைகளை அழித்து நல்ல கூடுதல் மகசூல் கிடைக்கும் என உறுதி தந்தபின்னர் பயிரில் விழும் பூச்சிகள் பற்றிய புகாருக்கு பூச்சிகொல்லிகளை பரிந்துரைத்தனர் , விதைகளுக்கு அதிகவிலை இவைகளால் தாங்கமுடியாத கடன்சுமையால் மூழ்கிப்போன விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் நாடறிந்தது .
              நமது நாட்டில் கிட்டத்தட்ட நூறுவகையானநெல்வகைகள் , ஏராளமான கத்தரிவகைகள் இருந்தது , இதனை பாதுகாக்க வேண்டிய அரசுகள் , இருக்கின்ற பாரம்பரிய நெல்,கத்தரி விதைகளை பாதுகாக்க , விளைவிக்க ஊக்க படுத்தாமல் விதைகள் காப்புரிமை  சட்டம் இயற்றி நாட்டுமக்களை அந்நிய நட்டு நிறுவனங்களிடம் கையேந்தவைக்க அரசின் அதிகார வர்க்க விஞ்சானிகளின் கருத்தைஏற்றுள்ளது  ,மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி ; இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய படுகொலை.
விதை காப்புரிமை சட்டமும், மரபனுமாற்றமும்: 
                 விதை காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெறாத நபர் விதைகள் வைத்திருத்தல் சட்டவிரோதம் , விதைகளை கட்டாயமாக நிறுவனகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்.இந்த விதைகளால் மண்வளம் நாளுக்குநாள் குறைந்துகொண்டேபோகும் .  பெரும்பாலும் தாவரங்களில் தன்மகரந்த  சேர்க்கை ,அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுவது இயற்கை , அயல்மகறந்த சேர்க்கையால் நமது பாரம்பரிய விதைகள் பயிர்செய்யப்பட்ட நாற்றாங்காலில் உள்ள பயிர்களில் மரபணு மாற்றம்  செய்யப்பட்ட விதைகள் கலப்படம் வர நேர்ந்தால் விதைகள் காப்புரிமை சட்டத்தால் இந்திய விவசாயிகள் கைது செய்யப்படுவது நிகழும். அயல் மகரந்த சேர்க்கை நிகழ்வால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்பட மலட்டு மரபணு மாற்றம்செய்யப்பட்ட விதைகள் காரணமாக இருக்கும்.
உணவு பொருள் பற்றாக்குறை :
        நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க பசுமைப்புரட்சி என்ற பெயரில் நவீன எந்திரங்களையும் , பூச்சிகொல்லிகளையும் கொண்டுவந்த பின்பும் வறுமையும் ,சாவும், எலிக்கறி உண்பதும் நிகழ்வதை தடுக்கவோ ,தீர்க்கவோ முடியவில்லை.  உணவுப்பொருள் தட்டுப்பாடு இல்லை போதிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது .  என்று சொல்லும் அரசு இப்போது பற்றாக்குறையை போக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் நாட்டிற்கு அவசியம் என விவசாய துறை அமைச்சர் கூறுவது தவறு.  உணவுபொருட்கள் தட்டுப்போடு  நிலவுதோ?,கையிருப்பு போதிய அளவு உள்ளதோ ? இந்த மாறுபட்ட விளக்கங்களால் மட்டும் வறுமை ஒழியாது.  அத்தியாவசிய பொருட்களின் முறைகேடு,பதுக்கல்,கடத்தல் இவைகளை முறையாக அறவே ஒழிப்பதுதான் வறுமையை ஒழிக்க ஒரே வழி , எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி செய்ய அரசு வெட்கப்படக்கூடாது , அதுவரை வறுமை ஒழியாது.
          மரபு வழிவிதைகளும், இயற்கை விவசாயமும்தான் இந்த நாட்டை காக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் நன்மையேதும் கிடைக்காது என்பதே உண்மை.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger