நந்தன் கால்வாய் திட்டம் . 6598.06 ஏக்கர் பயன்பெறுகிறது-பொ.ப.து.

Sunday, November 1, 2009

1979 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருவண்ணாமலை வட்டம்,செஞ்சி வட்டம்,விழுப்புரம்  வட்டம் முறையே 1566.20,1650.52,3,381.34 ஏக்கர் நிலங்கள் மொத்தம் 6598.06 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெரும் நந்தன் கால்வாய் திட்டம் 1979 இல் தொடங்கப்பட்டது .  இத்திட்டம் மூன்று வட்டத்திலும் 39 ஏரிகளை இணைத்து வளப்படுத்த திட்டமிடப்பட்டது.
           இக்கலவை செஞ்சி வட்டம் சோ.குப்பம் வரை வெட்டப்பட்டதாக தெரிகிறது , கால்வாய் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை வட்டம் கீரனூர் துரிஞ்சல் ஆற்றிலிருந்து வெட்டப்பட்ட சோ.குப்பம் வரை உள்ள கலவி துரவாரப்படாமல் இன்றுவரை பயன்பட்டிற்குவராமல் உள்ளது.  மேலும் மீதமுள்ள துரம் வெட்டப்படவுமில்லைவில்லுபுரம் வட்டத்திலுள்ள எந்த எரியும் இணைக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் உரிமைச்சட்டம் முலம் கால்வாய் வெட்டப்படாதது பற்றிகேட்டதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வளத்துறை ) இத்திட்டம் நிறைவுற்று பயன்பாட்டில் உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
           இதே திட்டம் நிறைவேற்றப்படதது குறித்து மேல்மலையனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் , முகையூர் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் ஆகியோர் கேள்விக்கு நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படு என்று பொதுப்பணி துறை  அமைச்சராக இருந்த துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
             எனினும் இத்திட்டம் 1979 முதல் இந்த மூன்று தாலுக்கா மக்களை ஏமாற்றும் தேர்தல் நேர வாக்குவங்கியாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.  தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்திக்காக நினைவில் வரும் கால்வாய் நிஜத்தில் வருமா ஏக்கத்தில் விவசாயிகள் அரசு பதிவேட்டில் மட்டும் வளம்பெறும் 6598.06  ஏக்கர் நிலங்கள் நிஜத்தில் வறட்சியின் பிடியில் .  முரண்பாடான அரசு அதிகாரிகள் , அமைச்சர்கள் ..

தமிழா விழித்திடு ..

Wednesday, October 28, 2009

இந்தியாவில் நதிகள் இணைப்பு பற்றி அடிக்கடி தலைவர்கள் பேசுவதுண்டு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அடிக்கடி .  தமிழ் நாட்டில் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , 234 சட்டமன்ற உறுப்பினர்கள் என இந்தியா ஆட்சியை யார் நிர்வாகிப்பது என்பதை தீர்மானிப்பது தமிழ்நாடுதான் என்றல் இல்லை  என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் கடுமையனவரட்சி என்றல் குடிக்க விவசாயத்திற்கு என எதற்கும் அண்டைமாநிலங்களான கர்நாடகா,கேரளா,ஆந்திர உள்ளிட்ட மாநிலங்கள் மதிய அரசு, உச்சநீதிமன்றம் என யார் சொன்னாலும் சட்டைசெய்வதில்லை. ஆட்சியை தீர்மானிப்பது தமிழன் என்ற நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் தமிழின தலைவர்கள் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்காக குடிநீரை பெற்றுத்தரமுடியவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. காங்கிரஸ் ,பாரதியஜனதா கட்சி போன்றவர்கள் தேசியக்கட்சி இருமாநில மக்களை அரவனைத்திபோவதைவிட சட்டத்தை மதிக்கின்றவர்களை சமாதனம் செய்துவிட நினைப்பதால் அவர்களை விடுத்து மாநிலக்கட்சிகளை தேர்ந்தெடுத்து வாக்களித்து வெற்றி பெற  வைக்கின்றனர். ஆனால் மாநிலக்கட்சிகள் அதையல்லாம் மறந்துவிட்டு மத்திய அரசில் எத்தனை அமைச்சர்கள் கேட்டுப்பெறுவது சம்பாதிப்பதர்க்காக என்பதுமட்டுமே குறியாக உள்ளனர்.  தமிழன் மீன் பிடிக்கப்போனால், தமிழன் தண்ணீர் கேட்டால் , தமிழன் உரிமையைக்கேட்டல் தாக்குதல் வழக்கு என எங்கும்,தமிழன் மதிக்கப்படுவதில்லை இதற்க்க்காகவா தாய் தமிழ்நாடு .  ஒற்றுமை இல்லாத தலைவர்கள் விழிப்புணர்வு இல்லாத மக்கள் அடி மாட்டு கூட்டங்களாக இந்தியா அரசுக்கு வரிகட்டிய அடிமைகள் வெட்ககேடு .   திருந்தவேண்டும் தலைவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் வோட்டுக்களை விற்பது , எது நடந்தாலும் தலை எழுத்து என்று மனதை தேற்றிக்கொண்டு போவது தமிழனுக்கு அழகில்லை.  பொறுத்தது போதும் தைமிழா  பொங்கி ஏழு.
.

உன்னைப்போல் நூறுகோடி

சமீபத்தில் தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல பொதுவாகவும் ஒரு பரபரப்பையும்,சர்ச்சைகளையும் ஏற்படுத்திய திரைப்படம் நடிகர் கமலஹாசன்,மோகன்லால் நடித்து வெளிவந்த உன்னைப்போல் ஒருவன்.இத்திரைப்படத்தில் தீவிராதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே அழிக்கமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.  இது எங்களைப்போன்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்ற கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி உள்பட ஏராளமானவர்கள் கண்டித்துல்லதில் இருந்து இப்படம் முக்கியத்துவம்பெற்றது.  சமீபத்தில் இப்படத்தை பார்த்தேன் ; சர்ச்சைக்குரிய படம் என்பதால் இரண்டுமுறைபபர்த்தேன். இப்படத்தில் ஒரு ஆள் (நடிகர் கமல் ஹாசன் ) ஐந்து இடங்களில் வெடிகுண்டுவைத்து அதை மாநகர காவல் ஆணையருக்கு , தொலைக்காட்சி நிருபருக்கு தெரிவித்து , கோவை குண்டுவேடிப்பில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட நால்வர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்து ஜீப்பில் ஏறவைத்து செல்போனில் இருந்து வெடிக்கின்ற வகையில் செட் செய்து தீர்த்துக்கட்டுகிறமாதிரி செய்து தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஆழிக்கவேண்டுமே தவிர இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நம்பி  ஒன்றும் பயனில்லை  என்பதுபோல் இருக்கும்.  இது சராசரி அமைதியையும் , நாட்டின்மீது பற்று உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சராசரி உணர்வுகள் இந்த தேசத்தில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் வசித்தாலும்,பல்வேறு கொள்கைகளை கொண்ட மதங்களை பின்பற்றுகிறவர்கள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற ஒருமைப்பாடு உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, இங்கு பல்வேறு காலகட்டங்களில் மக்கள் கூடுகிற இடங்களில் , வழிபாட்டு தளங்களில் , மருத்துவமனைகளில் , தொடர்வண்டிநிளையங்களில் , ஓட்டல்களில் , சட்டமன்றம் ,பாரளுமன்றம் உள்ளிட்ட பலஇடங்களில் வெடிகுண்டுவீசி தாக்குதல் நேரடித்தாக்குதல் உள்ளிட்ட பலமுறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி  கொன்றுகுவித்து வருவது அமைதியை விரும்பும் யாரும் ஏற்கமட்டர்கள் அப்படியிருக்க 112  கோடி இந்தியமக்களின் உணர்வுகள் போதுஅமைதிக்கும்,உயிருக்கும் கேடுவிளைவிக்கும் யாராக இருந்தாலு இந்து , கிறிஸ்து, முஸ்லிம், புத்த,சமண என எந்த மதத்திலும் கொலைசெய்ய போதிக்கதபோது எவரையும் , எவரும் கொலைசெய்வது மட்டுமல்ல மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு பேசுவதில் இருந்தே வன்முறை தோன்றுகிறது , எனவே யார்,யாரை தாக்கினாலும் அது குற்றமே , அது பொதுவாழ்வில் உள்ளவர்கள் அதுகுறித்து விழிப்புணர்வு செய்ய சொல்ல உரிமை உண்டு .அது கோவை குண்டு வெடிப்பனாலும் , பெஸ்ட் பேக்கரி வழக்கனாலும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டுமே தவிர குண்டுவைத்து பிறரை கொள்ளக்கூடாது. அதற்க்கு யாரும் அதிகாரம் பெற்றவர்கள் இல்லை .  எது எப்படியோ குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் ;கலையுனர்வுகள் போற்றப்படவேண்டும் அதுவும் சக குடிமகன்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும்.  இந்த தேசம் சுதந்திரமாக அமைதியாக திகழவேண்டும். ஜெய் ஹிந்து.

நம் தாய் பூமியை காப்போம்

Thursday, October 22, 2009

புவிவேப்பமடைவதன் விளைவாக ஏற்படும் கால நிலை மாற்றதால் உலகம் அழியக் கூடும் .  எதிர்காலத்தில் பூமிபந்தில் மனித இனமே வாழ முடியாத சூழல் ஏற்படும்) என விஞ்சானிகள் எச்சரிக்கின்றனர். பெட்ரோல் , டீசல், நிலக்கரி, எரிவாயு, போன்ற புதைவடிவ எரிபொருட்களை பெருமளவு பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் அடர்த்தி புவியின்வளிம்ண்டலத்தில் அதிகரிக்கொண்டே செல்கிறது.  சுமார் முன்னுறு ஆண்டுகளுக்குமுபு வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அடர்த்தி 250 ppm ஆகா இருந்தது .  தற்போது 389 ppm ஆகா அதிகமாகியுள்ளது. ( ஒரு ppm என்பது பத்து இலட்சத்தில் ஒரு பங்கு)  .
ithu aandukku 2ppm அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது .  கரியமிலவாயு சூரிய வெப்பத்தை பிடித்து வைத்துகொள்ளும் சக்தி வாய்ந்தது .  பூமியின் வளிமண்டலத்தில் கரியமில வாயு அடர்த்தி அதிகமாவதால் - பூமியின் மேற்பரப்பு வெப்பமும் அதிகமாகிறது. கடந்த  நூறாண்டில் சராசரியாக வெப்பநிலை 0.74 டிகிரி சென்டிகிரேடு அதிகமகிஒயுல்ல்து.
புவிவேப்பமடைவதன் விளைவு என்ன:
* புயல்,வெள்ளம், வரத்ச்போன்ற இயற்கை சீற்றங்கள் அளவுக்கு அதிகமாக தாக்குகின்றன.
* கடல் மட்டம் உயருகிறது, கடலோரங்கள் நீரில் மூழ்குகிறது , கடல் நீரால் நிலத்தடி நீர்வளம் உப்பாகிறது.
*  கடல் வெப்பநிலை அதிகரிப்பதாலும் அமிலத்தன்மை அதிகமவதலும் மீன்வளம் குறைகிறது.
*   வெப்பநிலை உயர்வதால் புதியவகை நோய்கள் தாக்குகின்றன.
*   மலைகளில் பனிப்பாறைகள் உருகுவதால் ஆறுகள் வற்றுகின்றன.
*   மழையில் மாற்றம் , வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீர் பற்றாகுறை  ஏற்படுகிறது. விவசாயம் பாதிக்கிறது. உணவு பற்றக்குறை ஏற்படுகிறது. 

தீர்வு என்ன:

வளிமண்டலத்தில் 389ppm அளவாக
 அதிகமாகியுள்ள கரியமில வாயு அடர்த்தியை 350ppm அளவாக குறைப்படுது.  அதற்கு பெற்றோலிய பொருட்களின் பயன்பாட்டின் அளவை குறைக்கவேண்டும்.
*  தற்போதுள்ள ௦௦௦ 0.7 டிகிரீ சென்டிகிரேடு வேப்ப் உயர்வினை 2 டிகிரீ சென்டிகிரேடு அளவிற்கு உயராமல் குறைக்க வேண்டும்.  இப்போதுள்ள் நிலையில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு மனித இனம் ஓரளவிற்கு நிவாரணம் தேடும் வகையில் உள்ளது.  இதற்கு மேல் இயற்கை சீறினாள் நம்மால் தீர்வுகாணமுடியாது .  புவியின் வெப்பத்தை குறைக்க தனிமனிதனாலும் முடியும் ஒவ்வொருவரும் மரம் நடல், மழை நீர் சேகரித்தல்,   போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

உயிர்பெறுமா க்யோடோ - உழன்றிடுமா புவி

புவி வெப்பமடைவதை தடுக்க்ப்பத், அதன் வயுளைவுகலி எதிர்கொள்வது குறித்த உலக நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடக்கின்ப்றன.  1988 ஆம் ஆண்டில் ஐ.நா.அவையின் அங்கமான உலக வானிலை அமைப்பும் (WMO)  ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP)  இணைந்து பன்னாட்ட்டு அரசுகளுக்கிடையிலான காலநிலை மாற்ற குழுமம் (Intter governmental Panel On Claimate Change - IPCC) என்ற அமைப்பை நிறுவின.
இந்த அறிவியலர்கள் குழு முறையே  1990, 1995,2001,2007 ஆகிய ஆண்டுகளில் கால நிலை மாற்றம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டது .  இதன் முதல் அறிக்கையே கால நிலை மாற்றம் குறித்த அவசர நிலையை எடுத்துக் காட்டியதால் , 1992 ஆம்  ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ -டி -ஜெனிரோ நகரில் கூடிய ஐ.நா. புவி உச்சி மாநாட்டில் (UN Earth Summit) ஐ.நா.கால நிலை மாற்றத் திட்டப் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.(UN Framework Convention on Climate Change) . 
இந்த அமைப்பின் தொடர் நடவடிக்கையாக ௧௯௯௭ ஆம் ஆண்டில் க்யோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. உலக நாடுகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் இந்த ஆவணம் , 1990 இல் வளர்ந்த நாடுகள் வெளிட்ட பசுமை இல்லவாயுக்கள் அளவினை ஒரு இலக்காகக் கொண்டு - அந்த நாபால் அந்த அளவுக்கு தலைகீழாக 5.2% அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதை  குறைக்கவேண்டும். இதற்கான கால அளவு 2008-2012 வரை ஆகும் . 
உலக பூபந்தில் உயிர்கள் வாழ உறுதி செய்யும் இந்த உடன் படிக்கை வளர்ந்த நாடுகளான அமெரிக்க , ரஷ்ய உள்ளிட்ட நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் உயிர்பெறாமல் போனது சில ஆண்டுகளுக்கு முன் போலந்து ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் முடியும் தறுவாயில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வரும் 7-12-2009  அன்று டென்மார்க் நாட்டின் கோபென்ஹெகன் நகரில் கூடும் கால நிலை மாநாட்டில் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டு உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வுடன் ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சிப்போம்.  நமது தாய் வீடு பூமி ஒன்றே  அதை காப்பது அனைவரின் கடைமை.

ஆண்மைக்கு வேட்டுவைக்கும் பிளாஸ்டிக்

Tuesday, October 13, 2009

மனிதனின் வாழ்க்கை முறை நவீன மையமான பிறகு பிளாஸ்டிக் அன்றாட செயல்களோடு இரண்டற கலந்து போனது .  காய்கறி சந்தைக்கு போனால், மளிகை கடைக்கு போனால், பூ கடைக்கு போனால்,மருந்து கடைக்கு போனால் , உணவகத்திற்கு  போனால், தறெனிர் கடைக்கு போனால் என எங்கு போனாலும்  சிலமணித்துளிகள் மட்டுமே நம்மோடு இருக்கின்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் , பல நூறு ஆண்டுகள் மறக்காமல் இந்த பூமியில் மண்ணின் நீர்பரவலை கெடுத்து வளமட்ட்ற மன்னாக மாற்றிவிடுகிறது, மேலும்னகரட்சிகள்,மாநகராட்சிகள் , பெருரட்சிகள் என அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப சிலர் மெட்ரிக் டன்  குப்பைகளில் ஆரம்பித்து பலநூற்றுக்கணக்கான மெட்ரிக் டன்  என நாள்தோறும் குப்பைகள் குவிந்தவண்ணம் உள்ளதால் நகராட்சி, பேரூராட்சி,மாநகராட்சி,ஊழியர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தீ வைத்து எரிதுவிடுகின்றனர் அதன் தீமை தெரியாமல்.
பிளாஸ்டிக் எரிப்பதால் உண்டாகும் தீமைகள்:
பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிப்பதால் டயாக்சின், கரியமில வாயுக்கள் உண்டாகிறது.  நச்சுத்தன்மை கொண்ட டயாக்சின் வாயுக்கள் அனுதிரல்கள்  மனித உடலில் உள்ள அனுதிரல்களோடு எளிதில் பொருந்திவிடுகின்றன.  ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் எரிக்கும்போது நேர்நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிர்களிகழந்து மெண்டு மனித உடலுக்குள் கலந்து விடும்.  டயாக்சின்  வாயுவை சுவாசிக்கும்போது மனித உடலில் கலக்கும் நச்சுவல் மனித உடலில்;  ஆண்மைக்குறைவு , பென்மைக்குறைவு, மலட்டுத்தன்மை , உடலுறவில் குறைந்த நாட்டம், பிறவி ஊனங்கள், மயிர்ச்சருமநொஇகல், நரம்பு மண்டலம் பாதிப்புகள் ,தோல்நிறம்  பற்றிய நோய்கள்,
உள்ளிட்ட எராளமான நோய்கள் உண்டாகிறது மினித வாழ்வில் இந்து நிமிடங்க பயன்ப்படும்தேநீர் கோப்பைகள் , பைகள்  நமது தாய் மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் ஏற்படுத்தும் தீமைகள் ஏற்கலாம் எனவே இயற்கையோடு இணைந்த வாழ்வோம் , இனிமையாக வாழ்வோம் .

பிணிபோக்கும் பணியில் போலிகள் ஒழிக்கப்போவது எப்போது?

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல் என்று இரண்டாயிரம்  ஆண்டுகள்ளுக்கு முன்னமே மருத்துவத்தின் மகத்துவம் பற்றி அய்யன் திருவள்ளுவர் உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கூறியுள்ளார் .  அதையேதான் நவீன மருத்துவமான அல்லோபதி என்னும் ஆங்கிலமருதுவம் நோய் என்னவென்று தெரிந்து அதன் தன்மையினை ஆராய்ந்து அதற்கேற்ற அளவு மருந்தினை அந்தந்த காலத்தில் கொடுக்கவேண்டும் என்கிறது. இன்றைய நவீன வாழ்கை முறை மாற்றத்தில் புதிய வகை நோய்களும் , புதியவகை சிகிச்சை முறைகளும் நடை முறைக்கு  வந்துவிட்டன.  இப்போதுள்ள சூழலில் புதிய இதற்குமுன் கண்டறியப்படாத நச்சு கிருமிகளால் ஏற்படுகின்ற நோய்களுக்கு மருத்துவர்களே பலியாகின்ற நிலையில் மனிதகுலத்திற்கு சற்று சவாலாகவே உள்ளது.  இந்நிலையில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவரிடம்  சிலகாலம் உதவியாளராக இருந்து கிராமங்களிலும் , சற்றுபெரிய கிராமங்களிலும் சிகிச்சை செய்கின்றனர்.  அதுவு சாதரண விதம் அல்ல அடிபடுகின்றன , சீழ்பிடித்த கட்டிகள் என ரண சிகிச்சியாளித்தலும், பிரசவம் பார்த்தாலும், சட்டத்திற்கு புறம்பான அரசு மருத்துவமனைகளில் கூட செய்ய தயங்குகின்ற நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு கருகளிப்பு போன்ற வைத்தியங்களை செய்து தாயின் உயிரோடும் குழந்தையின் உயிரோடும்  விளையாடும் போளிமருதுவர்களை கலையட்டுக்க சட்டங்கள் இருந்தும் அதை நடை முறைப்படுத்துவதில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 .  (Indiyan Medical council ACT 1956) ; இச்சட்டத்தின் ௧௫ ஆம் பிருவு ௨ ஆம் உப பிரிவு படி இந்திய மருத்துவ கவுன்சில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றவர்கள்தான் மருத்துவராக பணியாற்றலாம். மற்றவர்கள் அலோபதி சிகிச்சை செய்யக்கூடாது .  இச்சட்டப்படி பிரிவு ௧௫ உப பிரிவு ௩ இந படி மேற்கூறிய படி இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்படாமல் சான்றிதழ் பெறாமல் சிகிச்சை செய்பவர்கள் ஒரு வருடம் சிறைத்தண்டனையும், அபராததொகையாக 1000 ரூபாய் வரை கொடுக்கவும் இப்பிரிவு வகை செய்கிறது.  
இந்திய மருத்துவ பட்டங்கள் சட்டம் : 1956
 Indian Medical Degree Act - 1916;  இச்சட்டத்தின் பிரிவு 6 எ இன் படி எந்த ஒரு மனிதனும் அவரது பெயரின் பின்னல் எந்த ஒரு பட்டத்தையும் முறையாக பெறாமல் போடக்கூடாது .இதை மீறி அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் பெற்றோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் பெறாத பட்டங்களை போட்டுக் கொண்டால் முதல் முறையாக 250 ரூபாயும் இரண்டாம் முறையாக போட்டால் 500 ரூபாயும் கட்டவேண்டும்.
Drugs And Cosmetics Act 1940 ;  எந்தவ் ஒருமநிதரும் உரிஇமம் பெறாமல் மருந்துகளை உற்பத்திசெய்தல், விற்பனை செய்தல் பாதுகாத்தல் பிறருக்கு கொடுத்தல் செய்யக்கூடாது .  இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையும்,5000 ரூபாய் அபராதமும்விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.  மேலும் போலி மருந்து விற்பவர்களுக்கு சேமிப்பதற்கு உற்பத்தி செய்வதற்கு இடம் அளித்தால்  இவர்களுக்கு இ.பி.கோ. பிரிவுகள் 416,417,418,419,471,23,24,25,43,44,208,270,336,337,338  படியும் இந்த போலிமருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .  இந்த சட்டங்களை சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய அதிகாரிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி உயிர்காக்கும் பணிகள் சிறக்க வகைசெய்ய வேண்டியது கடமை சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

 

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger