ஆண்டிற்கு 50 லட்சம் பேரை கொள்ளும் உயிர்கொல்லி ஓர் எச்சரிக்கை

Wednesday, November 11, 2009


புகையிலை பீடி, சிகரெட்,குட்கா, ஹான்ஸ்,மெல்லும்புகையிலை என பலவடிவங்களில் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.  தற்பொழுது புகையிலை பயன்பாடுகள் 14 வயதுமுதல் 22 வயதுவரையிலான இளம் வயது ஆண்கள்,பெண்களின் எண்ணிக்கை 23 கோடியை எட்டும் நிலையில் உள்ளது .  இந்த புகையிலை பயன்பாடுகளால் ஆண்டுதோறும் இந்தியாவில் பத்துலட்சம் பேர் இறந்துபோகிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  இதனை தடுக்கும் பொருட்டு இந்தியாவின் இளம் அமைச்சராக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் சுகாதார அமைச்சராக பொறுப்புவகித்த மருத்துவர் அன்புமணி புகையிலை தடைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.  கடந்த 2008 அக்டோபர் 2  தேதி கொண்டுவரப்பட்ட இச்சட்டம் கல்விநிலையங்கள் , மருத்துவமனைகள் , சுகாதார நிலையங்கள் , கோவில்கள் என நூறு மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்களை விற்க , பயன்படுத்த தடை செய்கிறது.  பேருந்துநிலையங்கள் , தொடர்வண்டிநிளையங்கள் , பேருந்துகள், தொடர்வண்டிகள் , திரையரங்குகள், உணவகங்கள் , அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள்  என மக்கள் கூடும் எங்கும் இடங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடைசெய்கிறது.  இச்சட்டம் ஊடகங்களில் விளம்பரம் செய்ய , மாணவர்களுக்கு உதவுவதாக உதவித்தொகைகள் வழங்க , நிகழ்ச்சிகளை வழங்க, புகையிலை பொருட்கள் மீது 30  முதல்  50 சதம் வரை எச்காரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும் , திரையரங்குகளில்  குறைந்த பட்சம் காட்சி ஒன்றுக்கு இரண்டு விழிப்புணர்வு ஸ்லைடுகளை காட்டவேண்டும் என்கிறது.  2008 மே 31 முதல்  நடைமுறைக்கு  வந்த  புகையிலை பொருட்கள் மீதான எச்சரிக்கை படங்களை கட்டாயமாக்கும் சட்டம் புதிதாக புகைபிடிக்கும் இளைஞர்களை விழிப்போடு இருக்க செய்கிறது.   இப்படிப்பட்ட தீவிர புகையிலை தடைச்சட்டங்களை துணிச்சலுடன் கொண்டுவந்த அன்புமணியின் வழியில் துணிச்சலுடன் அதனை நடைமுறைப்படுத்த ஆட்ச்யாளர்கள் முன்வரவேண்டும் இளைஞர்களும் விழிப்புனர்வுகொள்ளவேன்டியது அவசியம்.

குப்பைகளோடு எரிந்துபோகும் பைந்தமிழன் கலாச்சாரம்

Friday, November 6, 2009

          குப்பைகள் மனிதவாழ்க்கையில் நீங்காத இடம் பெற்றுள்ளன .  பழந்தமிழன் கலாச்சாரத்தில் நிரந்தர குப்பைகள் என்பது இருந்ததே இல்லை .  உழவு தொழில் செய்யும் தமிழன் அறுவடையில் எஞ்சும் குப்பைகளை எரித்து சாம்பலாக்கி அந்த நிலத்தின் சாம்பல் சத்தினை இடுவான் நடவு நேரத்தில் தழைகளை போட்டு தழைசத்துகளை இடுவான் காய்கறி , பழங்களை தோட்டத்தில் பயிர் செய்வான் .  ஆனால் என்றைய நவீன உலகில் மனித வாழ்க்கையில் பிளாஸ்டிக் இரண்டற கலந்து விட்டது .ஐந்து  நிமிடம் கையில் இருக்கும் டீ கப் பலாயிரம் ஆண்டுகள் மக்கத்து மண்ணை கெடுக்கும் , தீ இட்டு எரிப்பதால் பல உயிர்க்கொல்லி நோய்களையும் , சூழலையும் கெடுத்துவிடுகிறது .  மனிதவளத்தை , மண்ணை கெடுத்து நமது பைந்தமிழனின் அடையாளத்தை அழித்துவிடும் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பைகள், கண்ணாடி , சில்வர் டம்பளர்  உள்ளிட்ட மறுசுழற்சிக்கு ஏற்ற இயற்கைக்கு இணக்கமான பொருட்களை பயன்படுத்தி மனித சமூகத்திற்கு ஏற்படும் உயிர்கொல்லி நோய்களிலிருந்தும், பெரிடர்களிளிருந்தும் பாடுகப்பை ஏற்படுத்தவும், இயற்கையின் நண்பனாக பிந்தமிழனாக மட்டுமல்ல நல்ல மனிதநேயமுள்ள தமிழனாக வாழ ஒவ்வொருவரும் முன்வரவேண்டும், முயற்சிப்போம் குப்பை இல்லாத சமுகம் ஆபத்தில்ல சமூகம் அமைக்க , வாழ்த்துக்களுடன்.

தமிழ்மக்களை கை கழுவிய காங்கிரஸ் அரசு

         நதிகள்  இணைப்பு தமிழகத்தை மிகப்பெரிய அளவில் வளப்படுத்தும் எனவே நதிகள் இணைப்பு அவசியம் என தமிழகத்தில் உள்ள தி.மு.க. , பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிகையில் குறிப்பிட்டுள்ளன.   காங்கிரசஸ் ஆட்சிக்கு வந்ததால் சேது சமுத்திரத்திட்டம் , நதிகள் இணைப்புத்திட்டம் என அனைத்தயும் சாதிக்கலாம் என நம்பியிருந்த தமிழகமக்களுக்கு பெருத்த ஏமாற்றம் சமீபத்தில் தமிழகம் வந்த பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நதிகள் இணைப்பு சாத்தியமற்றது அது சுற்று சூழலுக்கும் கெடுதல் என தமிழக மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு போனார்.  இச்சம்பவம் இந்தியா அளவில் மிகப்பெரிய விவாதத்திற்கு ஒரு பொருளாக மட்டுமில்லை ; காங்கிரஸ் தனது முகத்திரையை கிழித்துவிட்டத்தை தமிழக முதல்வர் மட்டுமல்ல அனைத்து கட்சி தலைவர்கள் மக்களுக்கும் தெளிவுபடுத்திவிட்டனர் சமீபத்தில் பிரதமமந்திரி மன்மொதன்சின் நேற்றையதினம் ஒரு கருத்தரங்கில் பேசிய இந்தியா அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டாலு  அலுவாலியா நதிகள் இணைப்பு தங்கள் அரசின் தற்போதைய நிறைவேற்றமுடியாத திட்டம் நதிகள் இணைப்பு ; ஏனெனில் நதிகள் இணைப்பால் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும், மேலும் நதிநீர் தொடர்பான தாவாக்கள் ( வழக்குகள்)  ஏராளமாக உள்ளன என்றும், சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது தமிழக மக்களை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கை கழுவிவிட்டத்தை தெளிவுபடுத்திவிட்டது.
          இதை உணர்ந்த தமிழக முதல்வர் ரிசர்வ் வாங்கி இயக்குனரை நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற உதவி கேட்டுள்ளார்.  தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு இலவசங்களை கட்டி எமட்ட்ருவதி விட்டு நதிகள் இணைப்பை நிறைவேற்ற நதிகள் இணைப்பை விரும்புகிற பயன்பெறுகிற மாநில முதல்வர்களின் ஆதரவை  நாடி இதுதொடர்பான நிலைப்பாட்டினை தேசிய அளவில் உறுதிப்படுத்தி முதலில் நதிகளை தேசிய மயமாக்க மத்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும் .  பிறகு தேசிய அளவில் நதிகள் தூர்வாரப்படவேண்டும் அதன் பிறகு வறட்சியால் பாதிக்கப்படும் மாநில மக்களின் உதவியுடன் நம் மாநில மக்களின் உதவியுடனும் தமிழ் மாநில மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் நதிகள் இணைப்பை நிச்சியம் நிறைவேற்றப்படவேண்டும்.  அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசின் உதவியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும், இல்லையேல் சட்ட ரீதியாக துரித நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
          தமிழ்மக்கள் குடிநீருக்காகவும் , விவசயத்திர்காகவும் தண்ணீர் தேவைக்காக அண்டைமாநில அரசுகளை எதிபார்க்க வேண்டியுள்ளது அதை தீர்க்கவேண்டியது தமிழக அரசின் கடமை ,  நதி நீர் சட்டம் கடை மடை விவசாயிகளின் (அரசுகளின்) அனுமதியின்றி அனைக்கட்டவோ, தண்ணீரின் போக்கைமற்றவோ , தடுத்து நிறுத்தவோ அனுமதிக்காதபோது உச்சநீதி மன்ற தீர்பிர்க்கு எதிராக சட்டம் இயற்றுவதை பார்த்துக்கொண்டு இருக்காமல் இந்தவிசத்தில் விட்டுக்கொடுத்துவிட்டால் தைழன் கேட்பாரட்ட்ற அனாதியகிவிடுவான் ,  தமிழகமக்கியாளை கைகழுவ நினைக்கும் மத்திய அரசின் போக்கை மற்ற ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வாக்கைப்பெட்ட்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை துறந்து பாடம் புகட்டவேண்டும். சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

நதிகள் இணைப்பு தேவை இல்லை : நதிகள் தேசமையம் முக்கியம்

Tuesday, November 3, 2009

இந்தியாவின் சகமாநிலமான தமிழ்நாடு விவசயத்திர்காகவும்,குடிநீருக்காகவும்,பெருத்த அவதிக்குள்ளகின்றன இதனால் பிரமாநிலன்களான ஆந்திரா,கர்நாடக,கேரளா மாநிலங்களின் உதவியை எதிர்பர்கவேண்டியுள்ளது .  ஆனால் மனிதநேயத்திர்க்காகவோ,உரிமைக்க்காகவோ சிறிதளவேனும் தண்ணீர் தர அவர்கள் தயாரில்லை அதற்காக நீர் வளத்துறை , உச்சநீதிமன்றம் , மத்தியாரசு என எந்த உத்தரவுகள் ஆனாலும் மதிக்கத்தயாரில்லை. ஆட்சிகள் மாறினாலும் கர்நாடக கட்சிகள் ஒன்றிணைத்து போராடுவதால் தமிழ்மக்களை சமாதான படுத்துவதிலே மதிய அரசுகள் இருந்தது.  இதற்கு மாற்றுதிட்டமாக  கொண்டுவரப்பட்டதுதான் நதிகள் இணைப்பத்திட்டம்.
நதிகள் இணைப்புத்திட்டம்:
            1834 ஆம் ஆண்டில் ஆங்கிலேய பொறியாளர் சர.ஆர்தர்கட்டன் என்பவரால் கங்கை -காவிரி நதிகளை இணைத்து தேவையான இடங்களில் அணைகளை கட்டி வரட்சியானபகுதிகளில் வளப்படுத்தவும், வெள்ளப்பெருக்கு மிகுந்த இடங்களில் வெள்ளச் சேதங்களை தடுக்கவும் ஆய்வுகளை செய்தார்.  1971-1972 இல் மத்தியநீர்வள அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல்.ராவ். கங்கை-காவிரி இணைப்புக்கான திட்டத்தை தீட்டினார். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இந்தத்திட்டம் நிறைவேற விரும்பினார்.
பிரம்மபுத்திர-கங்கை, மகாநதி-கோதாவரிய்-கிருஷ்ணா ,நதிகளை காவிரி நதியோடு இணைக்க ருபாய் 20,000 கொடி செலவு மதிப்பிடப்பட்டதால் இந்தத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது பூமாலை திட்டம் போடப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு 1982  இல் மதிய நீர் அபிவிருத்தி நிறுவனத்தை அமைத்து நதிகள் இணைப்புத்திட்டம் இந்து பெரும் பிரிவுகளாக திட்டமிடப்பட்டது.
           * இமாலய நதிகள் அபிவிருத்தி திட்டம்
            * தீபகற்ப நதிகள் அபிவிருத்தி திட்டம்.
       இதில் தீபகற்ப நதிகள் திட்டம் இந்து பெரும் பிருவுகலகப் பிரிக்கப்பட்டது .
            * மகாநதி - கோதாவரி-கிருஷ்ண நதிகளை காவிரி நதிகளோடு இணைப்பது. தேவையான இடங்களில் நீர் தேக்கங்களை அமைப்பது .
              * பம்பாய் க்கு வடக்கேயும் தபதிக்கு தெற்கேயும் உள்ள மேற்கு நோக்கி பாயும் நதிகளை இணைப்பது.
              * சென்-சம்பல் நதிகளை இணைப்பது .
               * மேற்கு நோக்கி பாயும் மற்ற நதிகளை இணைப்பது .
         இதில் தமிழகத்திற்கு பயனளிக்கும் மிக முக்கிய திட்டமான மகாநதி-கிருஷ்ணா -பென்னர் நதிகளை காவிரி நதிகளோடு இணைப்பது. இத்திட்டத்தின் மகாநதி -வைகை வரை உள்ளதுரம் 3716km அதற்காக செலவிட 50,000 கோடிகள் (at 1999 cost basis) நிர்ணயிக்கப்பட்டது .
           ஆனால் இந்த திட்டம் தொடர்பான அறிக்கை நீர்வள அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டு அங்கீகாரம் பெறுவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இடையே இன்னும் விவாதம் கூட நடத்தாமல் உள்ளது தான் வேதனை..
              இந்த நதிகள் இணைப்பு நமது மாநிலத்தை நிச்சயம் வளப்படுத்தும் என தமிழக மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில் தமிழகம் கட்சி வளர்சிப்பநிகளுக்காக வருகை தந்த காங்கிரஸ்  கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி துறைரீதியாக, அரசியல் ரீதியாக இன்னும்னடவடிகை எடுக்கப்படாதது குறித்து சொல்லாமல் தேச நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை எனவும் அது தேசிய அளவி சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டு போனார்.
                இது குறித்து தமிழக காங்கிரசார் தமிழகத்தின் நலன் குறித்து ஏதும் மருப்புதெரிவிக்க இயலாமல் ராகுல் கருத்தை திடீரென ஆதரித்து சுற்றுசூழலை காரணம் காட்டி திடீர் ஆர்வலராக மாறியுள்ளனர் தமிழக காங்கிரசார் .
               நதிகள் இணைப்பு என்பது அரசுத்தரப்பில் இருபது ஆண்டில் நிறைவுபெறும் திட்டம் என சொல்லப்பட்டது ஆனால் இத்திட்டம் தெட்டி இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பேசாமலே மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி சுகபோகம் அனுபவிக்கின்றனர். தற்போது இதுகுறித்து விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
             நதிகள் நீர் பங்கீடு, கூட்டுகுடிநீர் திட்டம்  எல்லாமே தமிழனுக்கு வாய்ப்பில்லாமல் செய்ய அண்டை மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
               நதிகள் இணைப்பை விட தற்போது நதிகள் தேச மயம், நதிகள் தூரவாரப்படல் போன்ற சட்டரீதியாக செய்து நதிகள் அனைத்து மாநில மக்களுக்கும்சொந்தம் என்பதை தீர்மானிக்கவேண்டும்.  பிறகு நதிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தவேண்டும் பிறகு சம்பந்தப்பட்ட மாநிலங்களுகிடையிலான நதிநீர் பங்கீடு உருதிப்படுத்தப்படல்வேண்டும்.
ஆணை கட்டும் விசயத்தில் கடைமடை மாநில மக்களை கெட்டு ஆட்செபமின்மை  உறுதிசெய்து அணை கட்டும் சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
      
          
  
          

4.நாட்களில் விடுதலை : வெட்கங் கெட்ட விளம்பரத்தின் மறுபக்கம்

Monday, November 2, 2009


         தாய் தமிழ்நாடு தனக்கு பாதுகாவலாக இருக்கும் என எண்ணி ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காக களம் காண தமிழ் ஈழ விடுதலைபுலிகள் எண்ணி கடந்த முப்பது ஆண்டுகளுக்குமேலாக போராடி வந்ததை இந்தியா தேசத்தின் பூகோலவரிபடங்கள்,ரேடார், பணஉதவி,ராணுவ பயிற்சி மற்றும் பாகிஸ்தான் ,சீன உள்ளிட்ட நாடுகளின் உதவியால் இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல்முடிவு தெரியுமுன்னே தாய்தேசத்தின் துரோகத்தால் பெரும்சொகமனமுடிவை சந்தித்தனர் புலிகள்.
         போர்முடிவுக்குப்பின் நிர்வாகச்சீர்த்திருத்தம் என்றபெயரில் அப்பாவித்தமிழ் மக்களை கம்பிவேளிகளுக்குள் விளங்கினங்களிவிட கேவலமாக அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் நெருக்கமாக திறந்தவெளியில் அடைத்துவைத்தனர் .  இதை உலகநாடுகளும், இக்கிய நாடுகளின் அவையும் வன்மையாக கண்டித்தன இதையெல்லாம் ஒரு பொருட்டாக  மதிக்காத  ராஜபக்ஷே எனும் அரக்கன் அப்பாவி மக்களை நிர்வாணப்படுத்தி சுட்டுத்தல்லினான் என்பதை காணும்போது மனிதநேயத்தை விரும்பும் யாவரும்  கண்நேரைமட்டுமல்ல குருதியைத்தன் சிந்தியிருப்பர்கள் .  உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் தலைவர்களும் இணைந்து போராடும்போது தாய் நாடு என்ற நம் தேசம் தனித்தனியாக  அரசியல் செய்ய பயன்படுத்திக்கொண்டனர் என்பதுதான் வெட்கக்கேடான விஷயம் .   இந்தநிலையிலும் மீதமுள்ள அப்பாவிகளை காக்கவவுது ஒற்றுமையாக குழுவாக சென்றிருக்கலாம், ஆனால் முதல்வர் கருணாநிதி கூட்டணி கட்சி குழுவென்று நேச விருந்தாளியாக தன கட்சிக்காரர்களை திருமாவளவன், கனிமொழி என்ற ஆர்வமுடைய இருவரை மட்டும் அனுப்பி பாடுகப்பக பழியைக்கழித்துக்கொண்டார்.
             ஆனால் நடந்ததை ஈழ பத்திரிக்கைகளும், திருமாவளவனும், கணிமொழியுமே அடக்கமுடியாமல் அங்கு ஈழ மக்கள் சொல்லோன்ன துயரங்களை அனுபவிப்பதை கண்ணேர் விட்டு சொல்லியிருப்பது, போராட்டம் நடத்துவது  போன்றவைகள் சாட்சியாகும்.
           ஈழ அப்பாவி மக்கள் நான்கே நாட்களில் விடுதலை என்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடி இருக்கிறார்கள் மானங் கேட்ட தி.மு.க. வினர் .  இது செத்த பிறகும் காட்டிகொடுத்த கருணாவைவிட வெட்கங் கெட்ட செயல்தான் கருனாநிதியின்செயல் என்பது தெளிவாகிவிட்டது.   இதையெல்லாம் இங்குள்ள தமிழன் வேண்டுமானால் படவிக்காக வேண்டுமானால் மறக்கலாம், மன்னிக்கலாம் இறந்த ஏல தமிழனோ தமிழச்சியோ மன்னிக்கமட்டால்.  இதுதான் தமிழனின் தலை எழுத்தாகிப்போனது  வேறேன்ன சொல்ல.

வெட்கப்படாத பூனைக்கண் புவனேஸ்வரி சகோதரர்கள்

Sunday, November 1, 2009


      சமீபத்தில் விபச்சாரவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை பூனைக்கண்  புவனேஸ்வரி பல்வேறு சினிமாப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில்  நடித்துள்ளவர்.  இந்த வழக்கில் ஏற்க்கனெவே ஒருமுறை கைதுசெய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, எனினும் குற்றமற்றவர் என விடுதலை ஆனவர்.   ஊடகங்களுக்கு பகிரங்கமாக தாம் விபச்சாரம் செய்ததை ஒத்துக்கொள்கிறார் , மேலும் நான் மட்டுமா இத்தொழிலை செய்கிறேன் தமிழ் சினிமாவில் யார் யார் விபச்சாரம் செய்கிறார்கள் என பட்டியல் வெளியிடுவேன் என பகிரங்கமாக சொல்கிறார். இவர் அளித்த பெட்டியை தினசரி ஒன்று வெளியிட்டதால் பரபரப்பு ஆனது தமிழ் திரையுலகம்  வெகுண்டெழுந்தது பத்திரிகைகளுக்கு எதிராக பிரயாணிகளுக்கு ,குவார்டர்களுக்கும்  எழுதுபவர்கள் என திட்டி தீர்த்தார்கள்.
       சினிமா நடிகர்கள் , நடிகைகள் வழ்கின்றமக்களுக்கு முன்னுதார்ரணமாக வாழவேண்டியவர்கள் ஒரு தப்பான வழிகாட்டியாக வாழுதல் என்பது வெட்கப்படவேண்டியதுதானே தவிர , தன்னுடைய சகோதரியை அவமான படுத்திவிட்டதாக  கூச்சலிட்டது சமூக பொறுப்புகளை பற்றி கவளைப்படுவதற்குதயாறில்லை எங்கள் ஒற்றுமையை வலிமையை பறைசாற்றுவதே  எங்கள்வேளை என அதிகார எந்திரத்தை பயன்படுத்தி சாதித்த பிறகாவது தங்கள் சகோதரிகள் பகிரங்கமாக கலாச்சாரத்தை சீரழிப்பதை வேடிக்கை பார்க்காமல் அதுகுறித்த எச்சரிக்கைகளை நடிகர்சங்கமும் செய்யலாம் அதைவிடுத்து கூப்பாடு போடுவதை தவிர்க்கலாம். ஒவ்வொரு நடிகருக்கும், பத்திரிகை மட்டுமல்ல சராசரி குடிமகனுக்கும் சமுகத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் கடமையும் வேண்டும்.

நந்தன் கால்வாய் திட்டம் . 6598.06 ஏக்கர் பயன்பெறுகிறது-பொ.ப.து.

1979 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருவண்ணாமலை வட்டம்,செஞ்சி வட்டம்,விழுப்புரம்  வட்டம் முறையே 1566.20,1650.52,3,381.34 ஏக்கர் நிலங்கள் மொத்தம் 6598.06 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெரும் நந்தன் கால்வாய் திட்டம் 1979 இல் தொடங்கப்பட்டது .  இத்திட்டம் மூன்று வட்டத்திலும் 39 ஏரிகளை இணைத்து வளப்படுத்த திட்டமிடப்பட்டது.
           இக்கலவை செஞ்சி வட்டம் சோ.குப்பம் வரை வெட்டப்பட்டதாக தெரிகிறது , கால்வாய் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை வட்டம் கீரனூர் துரிஞ்சல் ஆற்றிலிருந்து வெட்டப்பட்ட சோ.குப்பம் வரை உள்ள கலவி துரவாரப்படாமல் இன்றுவரை பயன்பட்டிற்குவராமல் உள்ளது.  மேலும் மீதமுள்ள துரம் வெட்டப்படவுமில்லைவில்லுபுரம் வட்டத்திலுள்ள எந்த எரியும் இணைக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் உரிமைச்சட்டம் முலம் கால்வாய் வெட்டப்படாதது பற்றிகேட்டதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வளத்துறை ) இத்திட்டம் நிறைவுற்று பயன்பாட்டில் உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
           இதே திட்டம் நிறைவேற்றப்படதது குறித்து மேல்மலையனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் , முகையூர் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் ஆகியோர் கேள்விக்கு நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படு என்று பொதுப்பணி துறை  அமைச்சராக இருந்த துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
             எனினும் இத்திட்டம் 1979 முதல் இந்த மூன்று தாலுக்கா மக்களை ஏமாற்றும் தேர்தல் நேர வாக்குவங்கியாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.  தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்திக்காக நினைவில் வரும் கால்வாய் நிஜத்தில் வருமா ஏக்கத்தில் விவசாயிகள் அரசு பதிவேட்டில் மட்டும் வளம்பெறும் 6598.06  ஏக்கர் நிலங்கள் நிஜத்தில் வறட்சியின் பிடியில் .  முரண்பாடான அரசு அதிகாரிகள் , அமைச்சர்கள் ..

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger